“ஒரு வார்த்தை ஒரு லட்சம்”
“ஒரு வார்த்தை ஒரு லட்சம்” ஒரு தொலைகாட்சி சானலில் வரும் வார்த்தை
விளையாட்டு, ஆனால் இன்றைய சில இளைஞர்கள் நம்ம நாட்டில் தற்போது
அளிக்கும் பதில்கள், ஒரு வார்தை பல லட்சம் என்றார்ப்போல் இருக்கும்,
“வாசலில் ஆட்டோ செல்கிறது கொஞ்சம் கூப்பிடேன்” என்று உதவிகேட்கும்
வயதானவருக்கு கிடைக்கும்பதில் “தாத்தா நீங்க தினமும் ஆட்டோவில் செல்கிறீர்கள்
ஆட்டோகாரர்களின் செல் போன் நம்பரை வாங்கிவைச்சுக்கங்க? யாருக்கு
டைம் இருக்கு ஓடிப்போய் கூப்பிட? என்று சிந்திக்க வைப்பார்கள்,
வயசாயிடுத்து என்று சொல்லியே காரியம் சாதிக்க நினைக்காதீங்க” நீங்களும்
க்யூவில் நின்றுதான் ஓட்டுபோடணும், நீங்கள்ளாம் ஓட்டு போடலைன்னு கவர்மெண்ட்
கவலைப்படலை, என்றவாறு சொல்லி “சபாஷ்டா கண்ணா” சொல்ல வைப்பார்கள்,
வெளிநாடுகளில் தனியாக, விவாகரத்து செய்தும், செய்யாமலும் என்று தனியாக குடும்பம்
நடத்தும் வயதானவர்களின் வாழ்க்கைமுறையை அடிக்கடி உதாரணமாக காட்டி நம்மை
“ஆகட்டும் அதுபோல” என்று சொல்ல வைப்பார்கள்,
உப்பு சர்க்கரைஅதிகமானதால் “உங்க பேரன் பேத்திகளையே சுமக்க உங்களால்
இயலவில்லை என்பார்கள், சர்க்கரை உப்பு சேர்ந்த நம் சரீரம் உடனே சுரணையுடன்
எழுந்திருந்து வேலை செய்ய எத்தணிக்கும், அறிவுரை கண்ணா அறிவுரை!!!!1
வாக்கிங்செய்யணும், கம்ப்யூட்டர் கத்துக்கணும், கிரிக்கெட் ஸ்கோர் ஞாபகம் வைச்சுகணும்,
யோகா தெரியணும், இமெயில் பார்த்து வைக்கணும், ஆபிசிலிருந்து வரும் மகன்,மருமகள்
மகள், பேரன், பேத்தி என்று அனைவருக்கும் செகரட்டரி வேலை செய்யணும்,வயதானபெற்றோரிடம்
இளைஞர்களின் ஆசை, எதிர்பார்ப்பு, ,
பாதுகாப்புக்கருதி துணைக்கு கூப்பிட்டால், “வயதான காலத்தில் என்ன? அப்படி பயம்?
108 இருக்கு உடனே வரும் ஒண்ணும் பயப்படாம இருங்க, உடனே வந்துடுவார்கள் என்பார்கள்.
108 தடவை நமசிவாயா,நாராயணா சொல்லி நடந்து போகலாம், என்ற முடிவோடு 108
ஞாபகப்படுத்திய இன்றைய இளைஞ்ருக்கு ஒரு முதுகில் “ஷொட்டு” கொடுக்கவைத்து
விடுவார்கள்,
இந்தாங்க உங்க அம்மாவிற்க்கும் எனக்கும் ‘”அண்டர்ஸ்டாண்டிங்க்” ஆகமாட்டேங்குது
மற்றபடி நான் என்ன சொல்லிட்டேன் அவங்க இஷடப்படி முதியோர் இல்லத்தில் இருக்கலாம்
என்றுதானே சொன்னேன்,கணவர் “ஏண்டி உனக்கும் எனக்கும் நம்ம பிள்ளைகளுக்கும்தான்
கருத்து வேறாக இருக்கு அதுக்கு என்ன செய்யறது,” “அது வேற இது வேறங்க” என்றாள்
மனைவி, சரி சரி நீ சொல்வதும் சரிதான், யோசித்துபார்த்தால் என்றார் கணவர்,
இப்படி பப்ளிக்காக பேசிக்கொண்டு செல்லும் கணவன் மனைவி,
திருமணம் ஆன கையோடு அம்மாவை பார்த்து மகன் சொன்னான் “அம்மா இனிமேல்
நான் என்னுடைய மனைவி சொல் கேட்பேன், இப்போதே சொல்லிவிட்டால்தான் நீங்கள்
என் வாழ்க்கையில் தொந்த்ரவு தரமாட்டீர்கள், இப்படி சத்யவான்களும் இருக்கிறார்களே!!!.
டிபெண்ட் செய்யாமல் வாழ்வது எப்படி? சொல்லி கொடுக்கும் இன்றைய இளைஞர்களுக்கு
என்னுடைய பாராட்டுக்கள் ஆனால் இளைஞர்களே “உங்களுக்கு வயதாகும் வரைதானே
இந்த அறிவுரை?