தாடி (மறுபதிவு)

பருவத்தை நாடி
பயிர் வந்தது தேடி
முகத்தை மூடி
முளைத்தது தாடி.!

ஆண்களின்
"தா"டையில் தடம் பதிக்கும் மு"டி"
தாடி.!

சிலருக்கு இது முகமூடி
சிலருக்கோ இது தான் முகவரி
தாடிக்கு ஒரு வசீகரம்
தாடிக்குள் பல ரகசியம்.!


இது
அறிஞர்களின்
ஆய்வுக் கூடம்
ஞாநிகளின்
ஞானத் தோட்டம்
காதல் தோல்விகளின்
சோகக் கூட்டம்

நபிகளின் தாடிக்குள்
நற்பண்புகள்
இயேசுவின் தாடிக்குள்
இரக்கம்
வள்ளுவனின் தாடிக்குள்
வாழ்வியல்


சாக்ரடீஸ் தாடிக்குள்
தத்துவம்
லிங்கனின் தாடிக்குள்
விடா முயற்சி
லெனினின் தாடிக்குள்
பொதுவுடமை
பெரியாரின் தாடிக்குள்
பகுத்தறிவு

ஒவ்வொரு தாடிக்கும்
ஓர் கதை உண்டு
ஒவ்வொரு தாடிக்கும்
ஓர் ரசனை உன்டு

முகத்தின் விழுது
இந்தத் தாடி.!

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (19-Dec-12, 9:06 am)
பார்வை : 169

மேலே