''நிருபி''(அன்னையில் நாம் கொண்ட அன்பை நிரூபிப்போம்)

மழையுடன் கூடிய பெரு காற்றும் ,பெரு மழையுமாய் இப்பொழுது காலனிலை ''' பூமித்தாய்க்கு உடல் நிலை சரி இல்லையாம் ''''' மருத்துவர்களும் கை விட்டு விட்டார்களாம் துக்கம் தாங்கா'' மலை மகள் ''' தர்க்கொலை செய்து கொள்கிறாள் (மலை நாட்டில் பாரிய மண்சரிவு) ''மழை''மகளோ மஞ்சள் குளித்து(இந்தியாவில் மஞ்சள் மழை)மனமுருகி வேண்டி ரத்தக்கணீர் ( இலங்கையில் சிவப்பு மழை)வடிக்கின்றாள் பூமித்தாயின் இந்த துயர் தாங்காமல் ''வாயுமகன் ஆடிப்போகின்றான் ''சூரியன்'' சோர்வடைந்து விட்டானாம் ஆண் மகன் வாட்டம் கண்டு ''வெண்மதி'' கலங்குகின்றாள். தாயின் செல்ல் பிராணிகள் கூட தர்க்கொலை செய்கின்றன....''' வான் மகள்'' நிலமை சொல்லவேமுடியவில்லை ''கடல் அன்னைக்கு எம்மீதுதான் கோபமாம் அடக்கமுடியாமல் ''நிருபி''க்க போகின்றாளாம் அன்பினால் மட்டுமே இன்னோய் குணமடைவது சாத்தியமாம் '''அதனால் பூமித்தாயின் நலம் வேண்டி இயர்க்கையை வணங்கி புவிதாயின் சினம் (வெப்பம்) தணிப்போம் நம் தாய் வயதானாள் அல்ல அவள் இன்னும் பல யுகங்கள் வாழக்கூடியவள் எம் அலட்சியத்தால் அழித்து விடாமல் அவளை அன்பால் அரவணைப்போம்....நம் தாயையும் நம் உறவுகளையும் பாதுகாப்போம் நலமுடன் வாழ்வோம்..........வரப்போகும் புது வருடத்தை ஆனந்தமாக வரவேர்ப்போம் ...........

எழுதியவர் : கவிதை தேவதை. (19-Dec-12, 9:44 am)
பார்வை : 164

மேலே