நீ.....

எனக்காக நீ வரமாட்டாயென அறிந்தும்
நேரம் போவதை அறியாமல் காத்திருக்கிறேன்...

என் தலையணை அருகே தொலைபேசியோடு தவமிருப்பேன்,
நீ அழைக்க மாட்டாய் என அறிந்தும்..

உன்னையே நினைத்து துடித்திருகிறேன்,
நீ என்னை நினைக்கமட்டாய் என அறிந்தும்..

எனக்காக நீயில்லை என அறிந்தும்,
உனக்கவே காத்திருக்கிறேன்....

உன் நிழல்களில் வாழப் பழகிக் கொண்டேன்
நமக்கான என் உலகில் எல்லாமே
நீயாகிப் போகிறது............

எழுதியவர் : பைசல் அபுபக்கர் (19-Dec-12, 10:46 am)
Tanglish : nee
பார்வை : 174

மேலே