இறைவன் இருக்கின்றான்
அந்த அதனை விட வேறு
எந்தப் பொருளையும் நாம்
சொந்தப் பொருளாய்க் கூறிட
பந்தம் இல்லையோ அதுவே.
கோள்கள் அத்தனையும் கோணம் மாறாமல்
கோலம் போட்ட வட்டப் பாதையில் சதா
உலா வரச் செய்து ஆழிகள் அனைத்தும்
கட்டுக்குள் நிற்க கட்டளை இட்டதுவோ
உயிர்ப் பொருள் அனைத்தும் உய்த்திடு வகையிற்
பயிர் வரிசையும் சக்கர உணவும்
அயராது வழங்கும் ஆற்றல் எதுவோ -மண்ணில்
அதனினும் மேலான சக்தியும் உளதோ?