அன்பின் வெளிப்பாடு
தென்றலை போல் வீசியவள்
புயலை போல் விட்டு சென்றாளே...
என் உயிர் சுவாசம் என்று
அவளை சுவசித்தேனே...
சுவாசிக்கவும் இயலவில்லை
அவள் பிரிவை உணர்ந்து ...
கடல் போல் எல்லை
இல்லா அன்பை கொண்டேன்
அவளிடத்தில்....
அவளோ என்னை கடலில்
கலக்கும் சிறுதுளி
தண்ணீரை போல்
நினைத்துவிட்டாளே...
நெருப்பை போல்
என் காதலின்
உண்மையை தெரிந்தும்
அவள் என்னை
தீயால் சுடுகின்றாளே...
அன்பு மழை பொழிவாள்
என்று நிலம் போல்
இருந்த என்மேல்
எரிமழை பொழிகிறாளே...
நெஞ்சம் நிலம் போல தாங்குமா...
என் காதலின் உயரம்
ஆகாயம் என்று கூறினேன் ....
பின்பு எப்படி என்னை
அடைவாய் என்று நினைத்து
சென்றுவிட்டாளோ....