வாடிய மரம் நான்

அவள்,
விழியால் பேசிய வார்த்தைகள்
விளங்காத புதிராக - விரலில்
காட்டிய ஜாலங்கள் விடை சொல்லும்
மொழியாக
அழகுக்கு அர்த்தம் சொன்ன
அவள் பாவனை - அன்பால்
அவள் தந்தாள் அளவில்லா
வேதனை...
சிறுவயதில்,
சிறு சிறு சண்டைகள்
சிலை போல் நிற்போம் - அமைதியாக
அருகருகே ...
அடுத்த நொடியே ,
மறைந்து விடும்
புயலான கோபமும்
புரியாத பிடிவாதமும்...
வயதானவர்களிடம்,
அவள் பேசும் பேச்சு வாத்தியத்தையும்
வெல்லும் - சண்டையிட அழைக்கும்
அவள் பேச்சு சட்டென்று நிற்கும் -அவள்
அவள் அருகில் நான் செல்லும் போது....
அந்நேரத்தில் ,
புலவர்களும் தோற்று விடுவார்கள்
என்னை வைத்து - அவள்
பேசும் உவமையணி கேட்டு...
ஒரு நாள் காணாவிட்டாலும் ,
அரங்கேற்றிவிடுவாள் நாடகத்தை - அவள்
கண் பார்வையால்...
அவளின்,
கண் பார்வை செய்த கலவரம் - எனக்குள்
காதல் என்ற நிலவரம்..
தகவல் பரிமாற்றம்,
மரக்கிளைகளில், பரிமாறிக்கொண்டோம்
திருமண மாலை - போல
தினம்தோறும் ....
வாழ்க்கை பாதை தெரியவில்லை - வயதும்
எனக்கு புரியவில்லை ...
வானம் பாடியாய் வாழ்ந்த எங்கள் - வாழ்வை
வலுவிழக்க வைத்தான் வெளிநாட்டு மாப்பிள்ளை..
எங்கிருந்தோ வந்தவன் எளிதாக எடுத்துசென்றான்
எனது என்னவளை...
அவள்,
கண்டாள் வாழ்வை
நான்,
கண்டது வனவாசம்....
முகம் பார்த்து பேசாதவள்,
முதல் முறையாக பேசினால்
கையில் தனது குழந்தையோடு...
என்னுயிர் தேவதை - என்று
எண்ணிய அவள் வாழ்க்கை - அதோ,
அந்த நகரத்தில்.
எனது வாழ்க்கை ,
அவள் இல்லா நரகத்தில்.
என்னை வாட வைத்த மரத்தோடு....