காட்சிப்பிழைகள்
கழிப்பறைவசதி
கேட்டேன்.........................!!!
இடதுகையை
ஒடித்தவிட்டு
சிறையில்
அடைத்தார்கள்..........!!!
வயிற்றுப்பசி தீர்க்க
வாக்குறுதி
கேட்டேன்.................!!!
நாக்கை அறுத்துவிட்டு
வாய்க்கரிசி
போட்டார்கள்.........!!!
. . . . . .
இடைத்தேர்தல்
இரண்டுமுறை
கேட்டேன்.................!!!
இரண்டு தொகுதிகளில்
இறுதி ஊர்வலம்
நடத்திடவேண்டும்
என்றார்கள்...........!!!
. . . . . . .
இடிந்தபாலம்
ஏனெனகேட்டேன்...........!!!
ஈசான்ய மூலையில்
எலுமிச்சைபழம்
இல்லை என்றார்கள்...!!!
. . . . . .
இடியாத பாலம்
ஏனெனகேட்டேன்............!!!
இழிச்சவாயன்
எவனோ ஒருத்தன்
என்றார்கள்.........................!!!
. . . . .
ஈயத்தட்டு ஏந்த
இட ஒதுக்கீடு
கேட்டேன்.....................!!!
எல்லைக்கோடு வரை
எல்லாம்இலவசம்
என்றார்கள்................!!!
. . . . . .
இலவச
கையெழுத்துக்கு
இட ஒதுக்கீடு
கேட்டேன்.....................!!!
எல்லைக்கோட்டிலும்
இடநெருக்கடி
என்றார்கள்................!!!
. . . . . . . . . . .
கதவில் எழுதிய
தள்ளு,இழு
என்றால்
என்னவென்று
கேட்டேன்...............!!!
பச்சைக்கையெழுத்து
போடுவதற்க்கு முன்
பாடும்
கருப்புத்தேசியகீதம்
என்றார்கள்........!!!
. . . . . . .
கற்பழிக்க என்ன
வழியென்று,
கேட்டேன்....................!!!
தினமொரு
தலைப்புச்செய்தி
படிக்கச்
சொன்னார்கள்.......!!!
. . . . . . . .
கற்பைக்காக்க
என்ன வழியென்று
கேட்டேன்.......................!!!
அவ்வையார் காலத்து
தினத்தந்தி
இருந்தால் எடுத்து
வரச்சொன்னார்கள்!!!

