முள்ளு ........

பாசம் வைத்தவரை
பண்பாய் பார்க்கும் உமக்கு
அன்பாய் பார்த்திட
அருகதை அற்றவனானேன் யான்

காலங்களும் என்னை கலைத்துவிட்டது - உறவுப்
பாலங்களும் எல்லாம் உடைந்து விழுகுது
கானல் நீரும் என்னை காணாது போகுது
காற்றும் எனக்கு வேலிபோட்டது
முள்ளும் எனை தேடியே குற்றியது

சேற்றுக்குள் கிடந்த என்னை
நாற்று நாட்டவர்களே கண்டேடுத்தனரே அன்றி
எட்டியும் பார்க்கலையே வேறு எவரும்
சீச்சீ
தோற்றுப் போனேன்
நாற்று நட்டவர் கண்டெடுக்கும் அளவிற்கு - நாதி
அற்றுப் போனேன்
தேற்சி அடையாமையாலோ - இல்லை
முயற்சி இல்லாமையாலோ
முழித்து யோசிக்கிறேன் இரவுதனில்

காற்றும் என்றோ என்பக்கம் வரும்
சக்கரையும் சுண்ணாம்பும் கொண்டு பாலங்கள் கட்டுவேன்
வெள்ளையர் காலனி நானும் அணிவேன்
முள்ளுக்கெதிராய்
முன்னுக்குவருவேன்
முடிந்தால் குற்றிப்பார்
பலியாக முன்பு என் வலியையும்
ஒருமுறை பெற்றிரு - முள்ளே
நீ குற்றியதால் யான் பெற்ற வலி
எனைக்குற்றின் நீ பெறுவாய் முள்ளே!
குற்றிப்பார்.....

எழுதியவர் : (19-Dec-12, 4:05 pm)
சேர்த்தது : srith2020
பார்வை : 148

மேலே