மறுமணம்

இல்லற வாழ்வை துவங்கிட வைத்திடும்
இருமனங்கள் இணைவதே திருமணம் ஆனது !
மறுமணம் என்பது புதுப்பித்த வாழ்க்கை
மாற்றிடும் நிலையை தேற்றிடும் மனதை !

கைம்பெண் ஆனாலும் கைவிடப் பட்டவர் ஆனாலும்
கைப்பிடிக்கும் ஆண்களே காத்திடும் கரங்கள் !
மனைவி மறைந்து மக்கள் இருந்தால்
துணையாய் இருந்திட துணைவி தேடுவர் !

முறிந்த மனங்கள் பிரிந்து வாழ்ந்தால்
முறைப்படி மறுமணம் மீண்டும் செய்வர் !
மறுமணம் என்பது அவரவர் விருப்பம்
திருமணம் என்பது தனிநபர் உரிமை !

மனைவி அறியாமல் மறுமணம் செய்வோர்
மனசாட்சி இல்லா கொலையாளி ஆவர் !
திருமணம் மறுமணம் முறைப்படி நடந்தால்
சமுதாய வெள்ளத்தில் கரைசேர முடியும் !

மறுமணம் விரும்பாதார் உறுதியாய் இருந்திட
தன்னிலை மாறாது தனிமையில் வாழ்ந்திட
அறவழியில் நின்று அமைதியை நாடினால்
ஆயுள் முழுதும் ஆனந்தமாய் வாழலாம் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (19-Dec-12, 3:49 pm)
பார்வை : 152

மேலே