!!!====((( நினைவலைகள் 5 )))====!!!

ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளவதென்பது மிகவும் கடினமான காரியம்தான், ஆனாலும் சினிமா ஆசையை நிறைவேற்றிக்கொள்ள பல போராட்டங்களும் சகிப்புத்தன்மையும் மிக மிக அவசியம், இந்த துறையில் பணம் இல்லாதவர்கள் முழுக்க முழுக்க தங்கள் திறமையை நம்பியே முன்னேற வேண்டி இருக்கிறது, அதிலும் பலகட்ட சோதனைகளை கடக்க வேண்டி இருக்கிறது.

விருகம்பாக்கம், இந்திரா நகர் இரண்டாவது தெருவில் நானும் எனது நண்பர்களோடு தங்கி இருந்தேன், அந்த காலகட்டத்தில் நான் இயக்கத்தை பற்றியும் இசையமைப்பது பற்றியும் கற்றுகொண்டு இருந்தேன், அந்த தருணத்தில் கே கே நகர் நெசப்பாக்கத்தில் உள்ள ஒரு சினிமா கம்பனியிலும் இனை இயக்குனரகாக சேர்ந்து பணியாற்றிக்கொண்டு இருந்தேன், விவாதிக்கப்பட்ட கதை காட்சிகளை இயக்குனர்கூற அதை ஸ்க்ரிப்ட்டாக எழுதிக்கொண்டும் இருந்தேன்.

இந்த நகர்வுகளிநூடே எனது முக்கிய நண்பர் ஒருவருக்கு ஒரு படம் இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது, எனது நண்பர் இயக்க இருந்த அந்த படம் முழுக்க முழுக்க வித்தியாசமான கதையம்சம் கொண்டது, ஆகையால் நாங்கள் கதை விவாதத்திற்காக கூட்டாக சேர்ந்து, செல்லூர் சந்துரு, மேலவளவு கருணாகரன், நத்தம் பாண்டியன் ஆகியோர்களின் இணைப்போடு மதுரையிலும், நான் செல்லமாக ஜி என்று அழைக்கப்படும் அண்ணன் சாமிராம் அவர்களின் இணைப்போடு உசிலம்பட்டியிலும், கொடைக்கானலிலும் இரண்டு மாதங்கள் தங்கி கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்தோம், கதை தென்மாவட்டங்களில் நடக்கும் சம்பவம் என்பதால் மதுரை உசிலம்பட்டி போன்ற ஊர்களில் உள்ள கிராமங்களுக்கு தினமும் நடந்து சென்று அங்கே நடக்கும் எதார்த்த சம்பவங்களையும், வட்டார வழக்குகளையும், வட்டார வாழ்வு முறைகளையும் சேகரித்து வந்தோம், இந்த படத்தின் நாயகன் கேதம் வீடுகளில், அதாவது சாவு வீடுகளில் கொட்டு கொட்டுபவன் என்பதால் சில கேதம் வீடுகளுக்கு நேரடியாகவே சென்று சில தகவல்களையும் சேகரித்து கதையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தோம்.

இழவு வீடுகளில் கொட்டு கொட்டும் தலைவன், படிக்காத பட்டிகாட்டு பாமரன், நாகரீகம் அறியாதவன் ஒரு நாள் கோட்டு சூட்டு போட்டுகொண்டு தன் காதலியோடு ஒரு டுயட் பாடுவதை போல் ஒரு கனவு காண்கிறான், இதற்காக ஒரு பாடல் எழுதும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டது, பாடலில் ஆங்கில கலப்பு வார்த்தைகள் வந்தாலும் நன்றாக இருக்கும் என்பது இயக்குனரின் விருப்பம், நான் ஆங்கில கலப்பை விரும்பாதவன்தான் ஆனாலும் அவசியமாக கருதி இயக்குனர் கேட்கும்பொழுது அதை எழுதி கொடுப்பதுதான் கவிஞனின் கடமை. ஆகையால் கீழ் வரும் பாடலை எழுதினேன்.

--------------------- பல்லவி --------------------------

ஆண்; ஹேய்... திருட்டு சிறுக்கி
- - - - - - லவ்யூ ஐ லவ் யூ...
- - - - - - பீல் உனக்கு இருந்தா
- - - - - - சொல்லடி ஐ லவ் யூ...
பெண்; ஹேய்... காதல் கிறுக்கா
- - - - - - லைக்யூ ஐ லைக் யூ...
- - - - - - பீல் எனக்கு இருக்கு
- - - - - - யு ஸ்டே ஹியர் மை ஹார்டில்..
ஆண்; நீ விழிகளை திறந்தால் சன் ரைசு
- - - - - - நீ விழிகளை மூடினால் சன் சிட்டு...
- - - - - - உன் விழியில் தொலைந்து
- - - - - - விண்ணில் பறக்குது எந்தன் நெஞ்சம்தான்...

----------------------- சரணம் 1 ---------------------

ஆண்; பட்டாம் பூச்சி சிறகடிக்கும்
- - - - - - உன்பாதம் பட்டால் மண்பூக்கும்
- - - - - - உன் ஒற்றைரோஜா கூந்தலழகு
- - - - - - என்னை மயக்கிடும்...
பெண்; மாலைநேரம் தென்றல் வரும்
- - - - - - உன்னை என்னில் சேர்த்துவிடும்
- - - - - - அந்த நொடியில்தானெ எந்தன்பெண்மை
- - - - - - என்னை காட்டிடும்...
ஆண்; கொலுசு கலகல கலவென கலக்கும்
- - - - - - மனசு படபட படவென துடிக்கும்...
பெண்; விரல்கள் தொடதொட தொடதொட துடிக்கும்
- - - - - - வெட்கம் அதைவந்து திரையிட்டு மறைக்கும்...

--------------------- சரணம் 2 ----------------------

பெண்; ஊரே உந்தன் பேர்சொல்லும்
- - - - - - எந்தன் நெஞ்சம் பூச்சூடும்...
- - - - - - கண்ணில்தூக்கம் வந்தால் போதும்
- - - - - - கனவும் பூத்திடும்...
ஆண்; காலை நேரம் பனித்தூவும்
- - - - - - புல்லின்மீது அது தூங்கும்
- - - - - - உன்பார்வை தீண்ட எந்தன்நெஞ்சம்
- - - - - - பனியாய் கரைந்திடும்...
பெண்; இதழ்கள் முத்துமுத்து முத்தமொன்னு கேட்கும்
- - - - - - இளமை இன்பத்திலே தன்னைத்தானே மறக்கும்...
ஆண்; கால்கள் உன்னைத்தேடி உன்னைத்தேடி நடக்கும்
- - - - - -வீசும் காற்றுகூட உன்வாசத்தில் மயங்கும்..

---------------------------------------( ஹேய்... திருட்டு)


பாடலின் பல்லவியில் மட்டும் சில ஆங்கில வார்த்தைகளை போட்ட நான் சரணத்தில் வேண்டாமென்று விட்டுவிட்டேன்.

(நன்றி! மீண்டும் அடுத்த பாடல் பற்றி கூறுகிறேன்)

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (19-Dec-12, 4:18 pm)
பார்வை : 166

மேலே