சோரம் போன சீதைகளும் கறை படிந்த கண்ணகிகளும்
சோரம் போன சீதைகளும்…..
கறை படிந்த கண்ணகிகளும்!
(கவிதை)
வார்த்தைப் பூக்களுக்கு
கருத்து வண்ணம் தீட்டி
மனத் தொட்டிலில்
மாண்புடன் பதித்து
மேன்மைச் சமுகத்தை
மீட்டெடுத்த திரைப்பாடல்
இன்று
தாசி வீட்டு ஸ்நான அறையாய்
வேசி வீட்டு விடி விளக்காய்!…
கவித்துவம் கழன்று போய்
காமாஸ்திரம் நிமிர;ந்து நிற்க
சீழ் வடியும் எழுதுகோலுடன்
நிர்வாணக் கவிஞர;கள்!…
இவர்கள்
மொழியின் அந்தரங்கத்தை
மௌனமாய் புணர்ந்து
ஊசிப் போன உளறல்களைப்
பாடலாய்ப் பிரசவிக்கின்றனர்
தலையாட்டி ரசிக்க
தரங்கெட்ட தசரதர் கூட்டம்
ஆயிரம் கற்பனை வைப்பாட்டிகளுடன்!
இதயச் சுவர்களில்
இறைமை வளர்த்த
இசை விரல்கள்
இற்றுப் போனதால்
இன்று
இடுகாட்டு ஆந்தைகளின்
இரவு நேர அலறல்
இசையென்ற பெயாpல்
இம்சை தர
நாளைய வித்துக்களின்
தொப்புள் கொடியில்
நச்சுக் காளான ;
அய்யகோ..
ராக ஆலாபனைகள்
ராப்பிச்சைக்காரன் கூவலாய்!;
சுருதி லயங்கள்
சாவு வீட்டுச் சங்கொலியாய்!….
வீரம் ஓதிய திரைப் பாடல்கள்
விரசப் பல்கலைக்கழகத்தின்
வக்கிரப் பட்டங்களாய்…
தத்துவம் பேசிய தமிழ் கானங்கள்
தத்துப்பித்துக் கீதங்களாய்..
யாரிடம் சொல்லி மாரடிக்க
பட்டுக் கோட்டையார் விரித்த
பட்டுக் கம்பளத்தில்
மூட்டைப்பூச்சிகளின் முக்கல்...முனகல்!
கண்ணதாசன் கட்டிய
கண்ணியக் கோட்டைக்குள்
காசுக்காய் கட்டில் வியாபாரம்
வாலியென்னும் வாத்ஸாயனாரோ
வார்த்தைகளை அம்மணமாக்கி
தனக்கொரு வேட்டி
தயாரித்துக் கொண்டிருக்கின்றார்
புதிதாய் முளைத்த
பூசணக் கவிஞர்களோ
தமிழ்ச் சொற்களுக்கும்
ஆங்கிலச் சொற்களுக்கும்
கலப்பு மணம் செய்வித்து
பாடல் புனைவதாய் எண்ணி
பாடை பின்னுகிறார்…
இந்த மன்மத ராசாக்களின்
வெட்டவெளி ஆலிங்கனத்தால்
வயதுக்கு வராத ரதி கூட
வாந்தியெடுக்கிறாள்!
குருத்து விடாத குழந்தை கூட
கலவி எண்ணிக்
கனவு காண்கிறது!
இனி
தீட்டுப்பட்ட
திரைப்பாடல்களைத்
தடை செயதாலன்றி
மொழியின் காயம் ஆறாது!
தொப்புளையும்..அக்குளையும் நம்பித்
தோல்காப்பியம் தீட்டும்
தொடை நடுங்கிக் கவிஞர்களைத்
துரத்தினாலன்றி
சமூகச் சருமத்தில் விழுந்த
சயரோகச் சிராய்ப்புக்கள் காயாது
முகில் தினகரன்
கோயமுத்தூர்.