ப்சி ஆற்றும் பூமி
பறவைகளின் எச்சங்கள் பூமிக்கு உரமாகும்
மரங்கள் பூமிக்கு நிழல் கொடுக்கும் கரங்கள்
மேகங்கள் பூமிக்கு புனிதநீர் தெளிக்கும்நீரருவிகள்
தேனீக்க்ள் சொரிகின்ற தேன் மானுடர்க்கு மருந்தாகும்
மலைகளும்காடுகளும்பூமிக்குமழைதரும் வனப்பாகும்
மனிதா நீ நிற்க்கும் இப்பூமி உனக்குப்பசிஆற்றும்
மலைகளை வெட்டி எடுத்து கற்க்களைவிற்றுக்காசாக்கி
காடுகளை அழித்து அடுக்கு மாடி வீடு கட்டி விற்று
பறவைகளை கூண்டில் அடைத்து வேதனை செய்து
மரங்களை அழித்து மாளிகைகளுக்கு வாசல் வைத்து
வாகனங்களின் புகையாலும், புகை பிடிக்கும் வகையாலும்
ஓசோனை துளை செய்து பூமிக்கு பகையாகும் வகை
செய்து வழிதேடும் மனிதா! உன் நலன் காக்கும் இயற்க்கையை
அழித்து இப்பூமியை பாழ்செய்யும் பாவத்தை ஏன் வகுக்கிறாய்?
நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் அனைத்தும்
ஆண்டவனின் நிதர்சனம், நினைவில் கொள்வோம்
அழிவுக்கு அரன் அமைப்போம் நீண்ட ஆயுள் பெறுவோம்,

