காதலை சுவாசிப்போம் ...!

சின்ன சின்ன
ஊடல்களில்
ஊற்றெடுக்கும்
காதல் ....

சின்ன சின்ன
தவிப்புகளில்
பெரும்தாகம் எடுக்கும்
காதல் ...

சின்ன சின்ன
நினைவுகளால்
பெரும் நினைவூட்டும்
காதல் ...

சின்ன சின்ன
நெருடல்களில்
நெருங்கி வரும்
காதல் ...

சின்ன சின்ன
ஆசைகளில்
ஆதாயம் பெரும்
காதல்...

சின்ன சின்ன
பிரிவுகளில்
ப்ரியம் பெரும்
காதல் ...

சின்ன சின்ன
இதயத்தில்
பெரிதாய் விளையும்
காதல் ...

சின்ன சின்ன
வலிகளில்
வலிமை பெரும்
காதல் ...

சின்ன சின்ன
துயரங்களில்
பெரும் துயர்த்துடைக்கும்
காதல் ...

சின்ன சின்ன
சந்தேகங்களில்
சந்தேகமற்று போகும்
காதல்...

சின்ன சின்ன
விருப்பங்களில்
வெறுப்பை மறக்கும்
காதல் ...

சின்ன சின்ன மனதுகளில்
பெரிதாய் உருபெறும்
காதலே ....!

காதலை
கவிதையாய்
படித்து .... காதலை
நினைவாய் கொண்டு
காதலை சுவாசிப்போம்
உயிர் மூச்சாக ....

எழுதியவர் : கருணாநிதி .கா (25-Dec-12, 8:38 am)
பார்வை : 201

மேலே