உறிஞ்சட்டாம் பூச்சி

உறிஞ்சட்டாம் பூச்சி

வாழை இலையின் கீழே
வெயிலுக்காக இளைப்பாறும்
வண்ணத்துப்பூச்சி

வந்தே மாதரமென
விடுதலைக்கு
சிறகசைத்த பந்தம்

மென்மையும் போராடும்
அகிம்சையாக

மனம் அலைபாய்வது போல
உன் அலைபாயலும்

புற்களின் நுனி பனியில்
உறிஞ்சுகள் கழுவி
பூக்களின் நடுவினில்
தேனுறிஞ்சும்
உறிஞ்சட்டாம் பூச்சி

சிறகுகளில்
வைத்திருக்கும்
பல வண்ணங்கள்
பல்வேறு மலர்களிடமிருந்து
ஒட்டிக்கொண்டனவோ

கைகளில் ஒட்டிக்கொள்ளும்
இந்நிற மாவுகளை
எந்த இயந்திரத்தில்
இவ்வளவு மைய அரைத்தாய்

நீ பறக்கையில்
விழாமல் ஒட்டி இருக்கும்
இந்நிற மாவுகளுக்குத்தான்
உன்மீது எவ்வளவு பற்று

பெண்ணிடம் தேனருந்தினால்
பெண்ணின் மனம் ஒட்டி கொள்ளும்

மலரிடம் தேனருந்தினால்
மலரின் மனத்தை விடுத்து
மகரந்தத்தை ஒட்டி சென்று
சூல்களில் சேர்க்கும் நீ
இயற்கையான செய்கையினால்
செயற்கையான கருவூட்டல்
கனிகளாய் .

மருந்துகளற்று
மனம் மகிழ்வுற்று
மனிதர்களின் மனிதங்களை
மீட்டுத்தரும் பட்டாம் பூச்சியே நீ
மனித மனதைப் படித்து
பட்டம் பெற்ற பூச்சியோ

பறந்து திரிக
பலரை பலப்படுத்த ...

எழுதியவர் : சுகந்த் (25-Dec-12, 11:49 pm)
பார்வை : 74

மேலே