இதய சிம்மாசனம்
வசீகரமானது
உன் புன்னகை
இதழ்களில்
அலங்கரிக்கின்றன
ஆபரணங்கள் !
என்னோடு
தொடர்ந்து வருகிறது
உன் நிழல்
மட்டுமே !
உன் உணர்வுகளை
நானறியேன் .
ஆனால்..
என் இதயம் முழுதும்
அலங்கரிக்கின்றன
மலர்ப் பஞ்சணையாக !
உன் இதயம்
மலர்ந்ததும்
சிம்மாசனமாகிறது
என் மனமெல்லாம் !
என் விக்ரகத்தின்
மலர்ப் பாதங்களில்
முத்தமிடுகிறேன்
கைகளில் ஏந்தி ..!
உன் பெயர்
என் மனமெல்லாம்
சொல்கிறது ஒவ்வொரு
துடிப்பிலும் !
அந்தப் பெயர்
என் நெஞ்சில்
இசைக்கிறது
வீணையின் இனிய
நாதம் போல் ..!
காதலியைப் பிரிந்த
அன்னத்தைப் போல
துடிக்கிறது
என் இதயம் !
ஒரு பூங்கொடியை
என் மீது படர விட்டது போல
உன் உருவம்
என் நினைவுகளில் !
என் தேவலோகத்து
இதய தேவதை
என்று
காண்பேன்
சொல் சிம்மாசனமே !