ஒரு வார்த்தை உதிர்ப்பாயா

வாயில்லா மலர் கூட
தென்றலுக்கு பதில் சொல்லும் தலை அசைத்து,
வாய் உள்ள பூவே,
ஒரு வார்த்தை உதிர்ப்பாயா,
உன் காதல் சொல்வாயா,
என் உள்ளம் தான் குளிராதா
உன் காதல் தான்
எனை அடித்துச் சாய்க்காதா
காத்திருக்கிறேன் உனக்காக
உன் ஒரு வார்த்தைக்காக...!