!!!பெண்ணினமே புரிந்துக்கொள்!!!
இறந்தவள் எழுவதில்லை
இழந்ததோ அற்பமானது
அதுமீண்டும் திரும்பாது
திரும்பும் திசையெல்லாம்
தரணியில் காமுகன்களே
தங்கையே விழித்துக்கொள் -உன்னை
தாக்கும் மிருகங்களை
தகர்த்தெறிய கற்றுக்கொள்-கடும்
தண்டனையெல்லாம் விரைவில்
துட்டுப்பக்கம் திரும்பிவிடும்.
வீட்டைவிட்டு கிளம்பும்பெண்ணே
வேட்டையாடும் மிருங்ககளை
வெட்டிவீழ்த்த கற்றுக்கொள்
வீச்சருவாய் வேணாமடி -உன்
வில்புருவம் போதுமடி
கயவனாலும் காமுகனனாலும்
ஆண்பெண் பேதம்பேசும்-சமுகமடி
கலாச்சாரத்தை கையிலெடுத்து
வீறுகொண்டு நடந்து
வெற்றிநடை போட்டிடு
சரியானபாதை என்றால்
சாயாமல் நடந்துச்செல்
தவறானபாதை என்றால்
சற்றும் சிந்திக்காமல்
தடம்மாறு தடுமாறாதே .
மேலைநாட்டு கலாச்சாரமது
அங்குமட்டுமே சாத்தியமடி
சத்தியமா திரைஉலகம்
திருந்தாது திரும்பிவிடு
அம்மோகத்திலிருந்து -உன்னை ,
திருத்திக்கொள்- கவிஞனின்
வீரக் கவிக்கே -நீ
கருவாகு அவனின்
பரிதாப கருவாய் -இனி
உன்வாழ்வது வேண்டாம் .
மாண்டுபோன பாரதியின்
மானத்தை காத்திடு -வீட்டுக்குள்ளே
பூட்டிவைத்த பெண்டிரெல்லாம்
பவனிவர பலப்பாவை -வடித்தவன்
பாட்டுத்தலைவன் பாரதியே ....
பெண்ணினமே புரிந்துக்கொள்
பொருக்குமினத்தை பொசுக்கிவிடு
போராட்டத்தை உனக்காய் -யாரோ
தொடுக்கவேண்டாம் நீயே
போராடி வெல்-வெற்றி நிச்சயம்
உன்
சுதந்திரம் உன்கையில்தான் ......