மனப்பக்குவம்
![](https://eluthu.com/images/loading.gif)
இலை தின்று
பருவமெய்தும்
கூட்டுபுழுதான்
வாய் மாறி
சுருள் குழல் ஆகி
தேன் உறிஞ்சும்
பட்டாம்பூச்சி.
இது பறந்து திரியும்
பருவமதில் நிதமும் தின்ன
இலை கேட்பதில்லை .
இலை மறைந்த
புதுப் பூவும்
அதை விலக்க
நினைப்பதில்லை
மனிதர்மனம்
பக்குவம் தனை
எய்திவிட தடு(ட)மாற்றம்
நிகழ்தல் என்பதில்லை.
அப் பக்குவத்தால்
எய்தும் பயன்கள்
தேய்ந்து போவதுமில்லை .
அன்றியும் மனதில்
தோய்ந்து மணம் பரப்ப
மறுப்பதுவுமில்லை...!