கண்ணே எங்கிருக்கிறாய்

கண்கள் காத்திருகின்றன, எப்போது ஒளி கிடைக்குமென்று....
குருடனாக வாழ்கிறேன் நம்பிக்கையுடன், எனக்காக ஒரு கண் வழ்ந்துகொண்டிருகிறது என்று...
பல வகை மூக்கு கண்ணாடியை அணிந்தும் எதுவும் மாறவில்லை எதுவும் அழகாகவில்லை, புரிந்துவிட்டது! எந்த கண்ணாடியும் உன் கண்களுக்கு ஈடாகது என்று...
சில நாட்கள் என்னை அந்த போலி கண்ணாடிகள் எமற்றிகொண்டிருந்தன, கலட்டி எறிந்துவிட்டேன்..
அந்த உண்மையான கண்களுக்காக காத்திருக்கிறேன்.
என் கண்ணை அழகாக காட்ட...
இந்த உலகத்தை உண்மையாக காட்ட..
அனைத்தும் அழகாகும் உன் கண் வழியாக..
உன் கண் இமை விழியாக..
உன் கண் இமை வழியாக, என் இதழோரம் புன்னகை பூக்க..
என்னை எப்போது பார்க்க நினைக்கும் கண் இல்லை உன்னுடையது..
உன் கண்ணில், என் வழியாக, அது உன் விழியாக நினைக்கும் கண்கள் அது...
என் விழிக்கு ஒளி கொடுக்கும் பார்வை அது...
உன் கண்ணில் என்னை புதைத்து வைக்கும் புதையல் அது...
உன் கண் இந்த உலகத்தை மட்டும் உனக்கு காட்டாது.. உன் கண் வழியாக என்னை காட்டும்...
உன் கண்ணில் தெரியும் என் ஆரோகியம்..
உன் கண் காட்டிகொடுத்துவிடும், என் சர்வத்தையும்...
நான் எந்த தூக்கத்தை உனக்காக மறைத்து சிரித்தாலும், உன் கண்கள் அழுது காட்டிகொடுக்கும் ...
என் கண்ணில் தூசி, நான் சிரிக்கிறேன் நீ அழகூடாது என்று, உன் கண்ணீர் என் கண் தூசியை துடைக்கும்..
எனக்கு வரும் எந்த நோவும் உன் கண்ணில் சரணடையும்...
உன் சத்தம் என்னை நெருங்காத நேரமும் உன் கண்கள் என்னிடம் பேசிக்கொண்டே இருக்கும்..
என்னை சுத்து பல பேர் உள்ளனர் ஆனாலும் உன் கண்கள் என்னை கொஞ்சும் எப்போதும்...
எப்போது வருவாய்..
என் தாய் வயிற்றிலிருந்து வந்து இருபத்தி மூன்று வருடங்கள் கழிந்துவிட்டன, நான் மறுபடியும் அந்த சுகத்தை அனுபவிக்க உன் கண்களில் வாழ என்கிகொண்டிருக்கிரேன்...
என் கண்களுக்கு ஒளி கொடுக்க வா.....
உன் கண்கள் தேடும் இரு கண்களாக நான் இருபேன் நம்பி வா......
இப்படிக்கு இருளில் வாழும் உன் கண்கள்.....

எழுதியவர் : MAATHAVAN (6-Jan-13, 3:02 pm)
சேர்த்தது : maathavan
பார்வை : 111

மேலே