நான் நானாகவே இருப்பதில்லை...

என்னை நானே தொலைத்து
எங்கெங்கோ தேடுகின்றேன்...
எவ்விடம் தொலைத்தேன்
எந்த நொடி தொலைந்தேன்
எதுவும் தெரியவில்லை.....

கண்முன்னே இருந்த இடமெல்லாம்
காணமல் போகிறது......
புதுபுது இடங்கலெலாம்
புகுந்து கொண்டன விழிகள் முன்பாய்....

ஒரே ஒரு நொடியில்
எங்கெங்கோ செல்கிறேன்...
எவர் எவரிடமோ
ஏதேதோ பேசுகிறேன்.....
மறு நொடியில் எல்லாம்
மறந்து போக
எதுவும் எனக்கு புரிவதில்லை.....

சின்ன வயதில்
என் அம்மா சொன்ன
கதைகளில் வரும் தேவதைகள்
என் கைபிடித்து
விண்ணில் பறந்து போகும்......
காடு மலைகலெலாம்
கடந்து போகும்.....
மறு நொடியே என்னை விட்டு
மறைந்து போகும்......

பல நேரங்களில்
பலபேர் முகங்கள்
கண்முன்னே வந்து போகும்....
சில நேரங்களில்
சின்ன சின்ன சண்டைகள்
செல்ல கோபங்களும்
சொல்லாமலே வந்து போகும்...

சில கணங்கள்
சின்ன சின்ன பயங்கல்
பாம்பு வந்து கொத்தும்....
புலி வந்து பாயும்...
பேய் வந்து மிரட்டும்...
நாய் வந்து
என்னை துரத்தும்......

எவனோ ஒருவன்
என் மீது வந்து
எனக்கே தெரியாமல்
கண்ணிமைக்கும் நொடியில்
கத்தி வீசிவிட்டு செல்வான்.....

ஒரே ஒரு நொடியில்
நானே நடிகனாகவும் மாறுவேன்...
வில்லனாகவும் மாறுவேன்....
எனக்கே தெரியாமல்.....

என்ன நடந்தது
என்பதே புரிவதில்லை....
என் முகமே
எனக்கு தெரிவதில்லை....

நான் நானாகவே இருப்பதில்லை....
நானாய் கண்விழிக்கும் வரையில்....

எழுதியவர் : அருண்குமார்.அ (6-Jan-13, 2:57 pm)
பார்வை : 151

மேலே