சிகரத்தைத் தொடுவோம் !

அகரமுதல எனும் அன்னை தமிழை
என்றும் சிகரத்தில் நிறுத்திடுவோம் !
அன்னைத் தந்தையை ஆயுள் முழுதும்
அன்பினால் சிகரத்தில் வைத்திடுவோம் !
ஒழுக்கம் இன்மையென ஒவ்வாமை இன்றி
ஒழுக்க சீலத்தில் சிகரமாகிடுவோம் !
சாதிமத வெறிகளை எரித்திட்டு என்றுமே
ஆதிமனிதனாய் சிகரத்தில் நின்றிடுவோம் !
கொள்கை கோட்பாடுகள் நெஞ்சில் நிறுத்தி
வையகத்தில் சிகரமாய் இருந்திடுவோம் !
பகுத்தறிவு சிந்தனை சிந்தையில் தேக்கி
வகுத்து வாழ்வதில் என்றும் சிகரமாவோம் !
உதவிடும் உள்ளத்தை உருவாக்கி உலகில்
பதவிகள் இன்றி சிகரத்தைத் தொட்டிடுவோம்
அறிவும் ஆற்றலும் இணைந்த மனிதராய்
அகிலத்தில் சிகரமாய் விளங்கிடுவோம் !
பரிவும் பாசமும் தெளிவும் தீர்வும் நிலையான
பாதையாக்கி சிகரத்தை அடைந்திடுவோம் !
சமுதாய சிந்தனை சிந்தையில் நிலைத்திட்டு
சறுக்கல் வராது சிகரத்தைத் தொடுவோம் !
பழனி குமார்