வாழ்கை

பிரிவின் வலி உனரவில்லயடி _ உன்
கூந்தலை பிரிந்த மலர் வந்து உரைக்கும் வரை ..

காதல் என்னவென்று உணரவில்லையடி - உன்
கண்களின் கண்ணீர் வந்து உரைக்கும் வரை ..

தமிழின் இனிமை என்னவென்று உணரவில்லையடி - உன்
உதட்டில் உதிர்ந்த வார்த்தை ஊரைக்கும் வரை ..

உறைபனி என்னவென்று உணரவில்லையடி - உன்
விழிகளால் என் இதயம் உரையும் வரை ..

நளினம் என்னவென்று உணரவில்லையடி - உன்
வீட்டு கண்ணாடி உரைக்கும் வரை ..

மலரின் வாசம் என்னவென்று உணரவில்லையடி - உன்னை
தீண்டிய தென்றல் உரைக்கும் வரை ..

வாழ்க்கை என்னவென்று உணரவில்லையடி - உன்
திருமண அழைப்பிதழ் வந்து உரைக்கும் வரை

எழுதியவர் : கவின் அன்பு (6-Jan-13, 3:24 pm)
Tanglish : vaazhkai
பார்வை : 153

மேலே