காதல் வலி
காதல் சுமை என்று நினைத்தேன்
சுகம் ஆக்கியவள் நீ ..
காதல் வலி என்று நினைத்தேன்
வலிமை ஆக்கியவள் நீ ..
காதல் பொய் என்று நினைத்தேன்
மெய் ஆக்கியவள் நீ ..
காதல் கண்ணீர் என்று நினைத்தேன்
கண்கள் ஆக்கியவள் நீ ..
இன்று என் கண்களின் உறக்கம் பறித்து
மண்ணுக்குள் நீ
சுகமாய் உறங்குவது ஏனடி ?