உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...!! (பொங்கல் கவிதை போட்டி)
தமிழரின் திருநாளாம் தைத்திருநாள்..!
கதிரவனின் கதிர்கள் வானில் பரவ
பூமித்தாயும் அவர்களின் புதல்வர்களாம்
"உழவர்களும்" மகிழ்ந்திருக்க
"உழைத்திடும் மக்களின்"
"உழவு திருநாள்" தொடங்கியது அன்று....!!
"பழையன கழிதலும்,
புதியன புகுதழும்" என்பது போல் உழவு
பழமையாகி மறைந்து கொண்டே வருகிறது..!
''உழவு நிலங்களை அடுக்குமாடி கட்டிடங்கள்
உண்ண'' ,விஷமாய் மாறியதே
விதைகள் இரசாயன உரங்களால்.....!!
"நாகரிக கவர்ச்சியும் அரசாங்க அலட்சியமும்"
நிலைகுலைத்தது
"விவசாயம் என்னும் அஸ்திவாரத்தை"
விநோதமாயானது விவசாயம் என்னும்,
வார்த்தையது இப்பொழுது...!
"சிறைவாசம் புரிகின்றனர், உழவனும் உழவும்"
தமிழ் புத்தகங்களில் வெறும் வார்த்தைகளாக...!!
இழிவின் பெருமையது இப்படி அடுக்கப்பட்டு,
ஒடுக்கப்படும் "உழவனும் உழவும்"
ஆதரிக்க யாரும் இன்றி நிற்கின்றனர்,
"மரணம் என்னும் விளிம்பில்"....!!!
என்ன செய்ய போகிறாய் தமிழா நீ....!?!?!?!