உழவின்றி உலகில்லை...((பொங்கல் கவிதை போட்டி..)).
விவசாயம் செய்வதால வியர்வைதானே...
மிச்சமுன்னு சொல்லாதடா தோழா...
வெட்டியா பேச வேண்டாம்...
கிட்டப் பிடி கலப்பையன்னு...
சொல்லுதடா வரும் காலம்...
பணத்த சேர்த்து வச்சவனெல்லாம்...
பாவி என்று சொல்லுறாங்க...
உழைப்ப சேர்த்து வச்ச...
நம்மள ஒசந்தவனா பாக்குறாங்க...
பணத்தோட மதிப்பு எல்லாம்...
குப்பை, பேப்பர்போல ஆயிருச்சு...
பாட்டன் செஞ்ச கலப்பைக்கு...
மவுசு இப்போ கூடிப்போச்சு...
பணத்தை மட்டும் வீட்டுக்குள்ள...
பத்திரமா பதிக்கிப்புட்டு....
பாவிப் பய விவசாயத்த...
தொட்டுப் பார்க்க மறந்துபுட்டான்...
பணத்துக்கு நீ ஆசைப்பட்டு....
இந்த விவசாயத்த விட்டுறாத...
பணத்த சேர்த்து வச்சுருந்தா....
பசியைத் தீர்க்க முடியாதடா...
உழவுத் தொழில் இல்லையின்னா...
உலகம்பிழைக்க வழி ஏதடா...................?