சுவிமல்ராஜ் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சுவிமல்ராஜ் |
இடம் | : வல்லம் ,செம்பனார்கோயில். |
பிறந்த தேதி | : 18-Aug-1980 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Apr-2012 |
பார்த்தவர்கள் | : 195 |
புள்ளி | : 62 |
என் பிறப்பிடம் வல்லம்(செம்பனர்கோயில் நான் தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்துவருகிறேன்.எம் தாய்மொழி தமிழுக்கு எம்மால் இயன்றவரை தொண்டு செய்வதே எம் வாழ்நாள் குறிக்கோள்.
நெடுங்கோண இதழ்களால்
சுட்டி நிற்கும்
பிஞ்சசுக் குழந்தையின்
சிற்றொலி...
இலவம் பாதம்
நெகிழும் காற்றின் புல்வெளி
காலசைத்த
புது உயிரின்
விட்டம் பார்க்கும்
சுட்டுவிழி....
எல்லாமாய் இயங்கும்
புதிய சூரியனை
கரங்களில் ஏந்துதல்
உலகின் அப்பாக்களுக்கு
நீரைத் தழுவும் காற்றின் சுகம்.
சங்க இலக்கியம் தமிழர்களின் வரலாற்றை பதிவு செய்து வைத்திருக்கிற ஆவணமாக விளங்குகிறது என்பது திண்ணம். தமிழர்களின் மறவாழ்க்கையில் விளையாட்டு மிக நெருக்கமுடையதாக இருந்திருக்கிறது. உலகத்தில் மாந்தரினத்தார் எவரும் விளையாடாமல் இல்லை. விளையாட்டுகள் அந்தந்த நாடுகளுடைய சூழல் மனித அறிவாற்றல் இவைகளுக்கு தகுந்ததுபோல் அவர்களாலேயே கட்டமைத்துக்கொள்ளப்பட்டன. ஆதி மாந்தன் இயல்பாய் ஓடியதும், நீந்தியதும் மலையிலும் மரத்திலும் ஏறியதும் பின்னாளில் விளையாட்டாய் முகிழ்த்துவிட்டது. விளையாட்டின் நோக்கம் மனமகிழ்ச்சியை பெறுவதாக இருக்கவேண்டும். அதன் மூலம் அறிவுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சியை ஈட்டிக்கொள்ள வழிவகைக்கிடைக்கும
தமிழில் குளிரும் சொல்
மழை!
விண்ணிலிருந்து
விழும் ஈட்டி
வானத்தையும் பூமியையும்
கட்டப்பார்க்கும்
நீர் நூல்.
மின்னல் கத்தி வெட்டியதில்
மேகப்பழத்தில் வடியும் சாறு
நிலமகள் குளத்தொப்புளில்
சில்லிடத்தெரிக்கும் பன்னீர்
நதியிதழ்களுக்காய் வழியும் தேன்
தாவரத் தாகம்தீர்க்க
வானம்கொடுத்த இளநீர்
விண்மரத்தில் வடியும்கள்
பருவகாலத்து நீர்ச்சாலை
கொட்டும் மொட்டு
குதிக்கும் நீரீசல்
நிலப்பாறையில்
விழுந்து உடையும்
மேகக்குருவி இட்ட
நீர்முட்டை
ரசிக்கும் கண்ணுக்கு விருந்து
ருசிக்கும் நாவுக்கும் மருந்து
நனையும் மேனிக்குள் ரகசிய மின்னல்
ஆனால்
ஓட்டைக் குடிசைக்காரனுக்கு
நீர
அரசியல் புனிதம் கெட்டு நிற்கும் இவ்வேளையில் தூய்மையாக்க
என்ன செய்யலாம் ?