நீரைத் தழுவும் காற்றின் சுகம்
நெடுங்கோண இதழ்களால்
சுட்டி நிற்கும்
பிஞ்சசுக் குழந்தையின்
சிற்றொலி...
இலவம் பாதம்
நெகிழும் காற்றின் புல்வெளி
காலசைத்த
புது உயிரின்
விட்டம் பார்க்கும்
சுட்டுவிழி....
எல்லாமாய் இயங்கும்
புதிய சூரியனை
கரங்களில் ஏந்துதல்
உலகின் அப்பாக்களுக்கு
நீரைத் தழுவும் காற்றின் சுகம்.