கர்ணன் அண்ணாமலை - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கர்ணன் அண்ணாமலை
இடம்:  chennai
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Sep-2015
பார்த்தவர்கள்:  454
புள்ளி:  7

என்னைப் பற்றி...

ஒவ்வொரு வித்யாசமான சம்பவங்களை உற்றுநோக்கும்போதெல்லாம் அதை எழுத்து வடிவமாக்க விருப்பப்பட்டிருக்கிறேன்..
சில எழுத்துக்கள் என் கண்களோடு முடிந்துவிடும்..
சில என் கணினியோடு முடிந்துவிடும்..
பகிர்வதற்கோ ஆர்வமில்லை..
ஆக இப்போது தான் ஆரம்பித்திருக்கிறேன்...
எவ்வளவு காலம் செல்லும் என்பதை என் எண்ணங்களே தீர்மானிக்கட்டும்..

என் படைப்புகள்
கர்ணன் அண்ணாமலை செய்திகள்
கர்ணன் அண்ணாமலை - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Nov-2016 7:36 pm

நவம்பர் 23 , 2015
அலுவலக வேலையாக நெல்லூர் வரை சென்றிருந்தான் . வேலை எல்லாம் முடிந்து RTC பஸ்ஸில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து போனை துறந்து பார்த்தபோது ஆறரை மணி ஆகியிருந்தது. நெல்லூரிலிருந்து சென்னை 170KM. எப்படியும் மூன்றரை மணி நேரத்தில் சென்னை வந்தடைய முடியும்.நெல்லூரிலிருந்து பஸ் கிளம்பி 20 கிலோமீட்டர் வந்திருக்கும். நரேஷிடமிருந்து கால் வந்தது.
" சொல்லுங்க நரேஷ் "
" சென்னைல செம மழை டா. நீ நெல்லூர்லே தங்கிரு " என்று சொல்லி போனை வைத்தார்.
ஜன்னலுக்கு வெளியே சற்று எட்டி வானத்தை பார்த்தான் , மழை பெய்யும் நிலைமையில் மேகமூட்டம் இருந்தது. ஆனால் ஒரு துளி கூட மண்ணை வந்தடையவில்லை. சென்னையில் மழ

மேலும்

கர்ணன் அண்ணாமலை - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Sep-2015 4:54 am

வந்தாரை வாழவைக்கும் நாடு
கருமவீரர் ஆண்டநாடு
நல்லதோர் தலைவர் இல்லாநாடு
வா தலைவா என்று கூவி அழைத்தாலும்
நடிகன் என்பதலாயோ சினிமாவிலே நல்லது செய்கிறார் ஒருவர் மற்றொருவர் கூட்டம் நடத்தி சிரிக்கவைக்கிறார்
ஒருமொழியை பலவகையாய் கொண்டநாடு
அய்யே முதல் அண்ணாச்சி வரை இங்குதான் உண்டு
இங்கு குஷ்பூவுக்கு கோயில் உண்டு
மதர்தெரசாவுக்கு இல்லை
பை நிறைய காசு உண்டு
கையளவு சுத்த காற்று இல்லை
ழகரம் பேசுபவனை இன்றைய தமிழ் புலவனாக மதிக்கும்
அம்மா என்றால் அரசியல் முதல் ஆன்மீகம் வரை நடுங்கும்
தாய்மொழி மறந்து மம்மி டாடி சொல்வது இங்கே மழலையின் பழக்கம்
சுப்ரீம் கோர்டே சொன்னாலும் மீட்டர் போடாத ஆடோக்கள்

மேலும்

சிறப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 18-Sep-2015 12:09 am
கர்ணன் அண்ணாமலை - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Sep-2015 4:41 pm

நாலு லட்சம் கடன் வாங்கி
நாலு வருடம் படித்து முடித்து
நாற்பது மாதம் கழித்து கிடைத்த வேலையால்
நான்கே வருடத்தில் கடனை அடைத்தேன்.
அத்துடன் இன்ஜினியரிங்கும் முடிந்தது
என் இளமையும் முடிந்தது

மேலும்

கர்ணன் அண்ணாமலை - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Sep-2015 12:03 am

என் அறை மின்விளக்கின் நிலையை எண்ணி ஒருநிமிடம் வருந்துகிறேன்....
நான் பயத்தில் விழித்தெழுந்த இரவுகள் முழுதும் கண்சிமிட்டாமல், அது முழித்துக்கொண்டிருக்கிறது
விழித்தெழுந்த எட்டாவது நிமிடம்.... இளையராஜாவின் இசையாேடு அடுத்த கனவுக்குள் அலட்சியமாக சென்றுவிடுகிறேன், விளக்கை அணைக்காமலே
எவ்வளவு கொடூரமான கொடுங்கோலன் நான்!!

மேலும்

கர்ணன் அண்ணாமலை - கர்ணன் அண்ணாமலை அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Sep-2015 2:36 am

காரணமறிய தோன்றிய குழப்பம்
மூன்று நாட்களாகியும் முடிவுகள் எட்டப்படவில்லை
சொல்லப்போனால் மூன்று வருடங்கள்
குழப்பத்தின் உச்சம்தான் இந்த மூன்று நாட்கள்
தூக்கங்கள் வருவதாய் இல்லை
திறந்த கண்களோடு சிமிட்டும் இமை மறந்து
எதையோ யோசித்துகொண்டிருகிறேன் எதையெதையோ யோசித்துகொண்டிருகிறேன்
எனக்குள் நானே எண்ணூறு முறையாவது பேசி கொள்கிறேன்
செய்வதறியாது அந்த அறைக்குள்ளே புழுங்கி புழுங்கி
தெரியாத்தனமாய் மொட்டை மாடியின் தண்ணீர் தொட்டியின் படிக்கட்டில் ஏறிவிட்டேன்
நகரத்தின் சத்தத்தை மீறிய ஓர் இருள்
எங்கயோ தொலைத்த கனவுகளை அந்த இருட்டுக்குள்ளே தேட தொடங்கினேன்
மூன்றுமணி நேரம் அப்படி என்ன தான் செய்தேன்

மேலும்

நன்று இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Sep-2015 6:43 am
மேலும்...
கருத்துகள்

மேலே