என் தமிழ்நாடு
வந்தாரை வாழவைக்கும் நாடு
கருமவீரர் ஆண்டநாடு
நல்லதோர் தலைவர் இல்லாநாடு
வா தலைவா என்று கூவி அழைத்தாலும்
நடிகன் என்பதலாயோ சினிமாவிலே நல்லது செய்கிறார் ஒருவர் மற்றொருவர் கூட்டம் நடத்தி சிரிக்கவைக்கிறார்
ஒருமொழியை பலவகையாய் கொண்டநாடு
அய்யே முதல் அண்ணாச்சி வரை இங்குதான் உண்டு
இங்கு குஷ்பூவுக்கு கோயில் உண்டு
மதர்தெரசாவுக்கு இல்லை
பை நிறைய காசு உண்டு
கையளவு சுத்த காற்று இல்லை
ழகரம் பேசுபவனை இன்றைய தமிழ் புலவனாக மதிக்கும்
அம்மா என்றால் அரசியல் முதல் ஆன்மீகம் வரை நடுங்கும்
தாய்மொழி மறந்து மம்மி டாடி சொல்வது இங்கே மழலையின் பழக்கம்
சுப்ரீம் கோர்டே சொன்னாலும் மீட்டர் போடாத ஆடோக்கள் இங்கு வழக்கம்
ஒரு வாரத்தில் ஒன்பது திரைப்படம் வெளிவரும்
பதினேழு ஆடியோ ரிலீஸ் இருக்கும்
முப்பதிரெண்டு போராட்டம் நடக்கும்
இருநூற்றைந்து பொருட்களின் விலை உயரும்
இங்கு தல கோ தளபதி கோ எந்த வலியும் இல்லை
அவர்களின் வழிகளினால் தான் மற்றவருக்கெல்லாம் வலி
வாயிலே வடசுட்ட "வித்த"கர்கள் இங்குண்டு
பகிங்கம் கால்வாய் தொலைத்து இசிஆர் பெற்று
அரசியல் தொலைத்து அடிமைத்தனம் வந்து
பசி தொலைத்து பைத்தியமாகி
தமிழ்நாடு டம்மிநாடாக மாறும் நாள் வெகுதூரம் இல்லை