அடுத்த நொடி நிஜம் இல்லை
அலமாரியில் காத்திருக்கும் அணியாத என் புது உடுப்பு..
இரண்டு மூன்று நாளாய்த் தள்ளிப்போட்டு, இன்றேனும்
அழைக்க நினைத்திருந்த அலைப் பேச்சு..
பார்க்க நினைத்திருந்த பழையதொரு திரைப்படம்..
பிரிக்காமல் வைத்திருக்கும் நேற்று வாங்கிய வார இதழ்..
சரியாக்க நினைத்திருந்த நட்பொன்றின் சிறுபிணக்கு...
சிறுவாடு சேர்த்து,
கை மாற்றாய் நான் கொடுத்த கொஞ்சம் காசு..
வெகுநாளாய் வாங்காமல் இருக்கும் தையற்கடைத் துணிமணிகள்...
இன்றாவது கட்டாயம் செய்து தருவதாய்ச் சொன்ன இனிப்புக்கு ஊறிக்கொண்டிருக்கும் கோதுமை ..
இன்ன பிற.... எல்லாம்...
என்னவாகும்....??
இன்று காலை நான் எழாமலேயே போயிருப்பேனெனில்....??
# அடுத்த நொடி நிஜம் இல்லை.. அதுவரை யாரும் பகை இல்லை...