Manivannan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Manivannan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 04-Sep-2019 |
பார்த்தவர்கள் | : 75 |
புள்ளி | : 8 |
என்
கண்முன்னே
ஓர் வேட்டைக்கான
சரியான திட்டமிடலுடன்
அரங்கேறி கொண்டிருந்தது
அச்செயல்
இறையின் மீதே
கண்களை வைத்து
கொத்தி தூக்கும் நேரம்
விரட்டி விட்டேன்
என் வீட்டு கோழிகளை
ஏமாற்றுத்துடன் திரும்பியது
அப்பருந்து
நிம்மதி எனக்கு
நம்மவற்றை
காப்பாற்றினோம் என்று
என்னையும் அறியாமல்
உணவுச்சங்கிலியில்
ஒருவன் தட்டிலிருந்த
உணவை
பறித்து விட்ட
தவறு தெரியாமல்
மகிழ்ச்சியில் இருக்கிறேன்
இப்போதும்
மழை என்னும்
பரிசுத்தம்
மண்ணை அடைந்தவுடன்
பெற்று விடுகிறது
சாதியினை
பிரசவிப்பதெல்லாம் ஓரிடம்
பிறக்கும் இடம் தரும் சாதிகளாய்
மழலைகளை போல்
தீண்டத்தகாதது என்று
ஒதுக்கும் சாக்கடையாய்
தீண்டி கடவுளின் கருவரைக்குள்
நுழையும் பன்னீராய்
தவளைகளின் நீங்காத இசைகள்....
இலையோரம் தேங்கிய மழைத்துளி....
சாலையெங்கும் நிலவின் பிம்பம்....
குழிகள் தோறும் நிரம்பிய சாக்கடை....
இரவு முழுதும் கொசுக்களின் ரீங்காரம்....
காலை வரை அகலாத போர்வைகள் ....
குளிர்ச்சி தரும் வாடை காற்று ....
அன்று மட்டும் ஓய்வெடுத்த மின்விசிறி....
ஓர் இரவில் நிரம்பிய ஆழ்க்கிணறு ....
மின்விளக்கை சுற்றி வரும் ஈசல் கூட்டம் ....
அபூர்வமாய் வந்தடைந்த மின்மினிகள் ....
குரல் மாற்றிய ரேடியோ ஒலியலைகள் ....
தூரல் வருமுன் துண்டித்த மின்னிணைப்பு....
அலையடித்த தொலைக்காட்சி பெட்டிகள்....
தூக்கம் துரத்திய இடி மின்னல்கள்....
இவை அனைத்தையும் தந்தது
ஓர் " மழை பேய்ந்த இரவு !!
நீ விட்டு சென்ற
மறுநாள்
தலைவாரும் நேரங்களில்
என் முடிகளை வருடி விட
சீப்பில் எப்போதுமிருக்கின்றன
உன் கூந்தல்
முடி
ஞாபகங்களாய்
======================
நீ இல்லாத
நாட்களின் தனிமையை
உணர்ந்து கொள்வது
நான் மட்டுமல்ல
எழுதுகோலும்
இன்றைய நாட்குறிப்பின்
வெற்றுக்காகிதங்களும்
பிரிவு
======================
என் நினைவாய்
உள்ளவற்றை உடைத்தாய்
மற்றவற்றை
எரித்தாய்
நான் இருக்கும் இதயத்திற்கும்
நினைக்கும் உன் மூளைக்கும்
மட்டும் என்ன
விதிவிலக்கு
========================
உறவின்
உயிரின் துறப்பு
கையில் மட்டும் துடிப்புள்ளது
ஓர்
மரண சாசன
உடன்படிக்கையில்
கைய
தெரு ஓர பூங்கா!
யாருமற்ற மனித மறைவு பிரதேசம் போல்,
பூங்கா நாற்காலி.
ஊரடங்க உத்தரவாய்
அமைதி
என் தனிமையை சீண்டாமல்...
தனிமையை பங்கிட்டு அமர்ந்து கிடந்த நாய்....
காது குழலை அடிக்கடி தீண்டி விட்டுப் போகும்..
காற்றின் மௌன ராகம் ...
அமைதியின் அவசரம் புரிந்து...
ஒலி எழுப்ப மறந்து செல்லும் சாலையோர வாகனங்கள்....
இயற்கையின் ஒத்துழைப்போடு
இயைந்து சென்ற அமைதி நொடி.....
அத்தனையையும் உடைத்தெறிந்தது
பூங்கா மூட எழுப்பப்பட்ட ஒலி