மழை பேய்ந்த இரவு

தவளைகளின் நீங்காத இசைகள்....
இலையோரம் தேங்கிய மழைத்துளி....
சாலையெங்கும் நிலவின் பிம்பம்....
குழிகள் தோறும் நிரம்பிய சாக்கடை....
இரவு முழுதும் கொசுக்களின் ரீங்காரம்....
காலை வரை அகலாத போர்வைகள் ....
குளிர்ச்சி தரும் வாடை காற்று ....
அன்று மட்டும் ஓய்வெடுத்த மின்விசிறி....
ஓர் இரவில் நிரம்பிய ஆழ்க்கிணறு ....
மின்விளக்கை சுற்றி வரும் ஈசல் கூட்டம் ....
அபூர்வமாய் வந்தடைந்த மின்மினிகள் ....
குரல் மாற்றிய ரேடியோ ஒளியலைகள் ....
தூரல் வருமுன் துண்டித்த மின்னிணைப்பு....
அலையடித்த தொலைக்காட்சி பெட்டிகள்....
தூக்கம் துரத்திய இடி மின்னல்கள்....
இவை அனைத்தையும் தந்தது
ஓர் " மழை பேய்ந்த இரவு !!! "

எழுதியவர் : கா.மணிகண்டன் (12-Aug-19, 10:05 pm)
சேர்த்தது : மணி ராக்ஸ்
பார்வை : 1751

மேலே