பஞ்சபூதம்

பஞ்சபூதம்

காற்று
-----------

சுதந்திரம் என் பெயர்.
நான் உருவம் இல்லாதவன்.
எங்கும் வியாபிப்பவன்.
ஏற்ற தாழ்வு பார்ப்பதில்லை.
உயிர் ஜீவராசிகளின் சுவாசம் நான்.
தென்றலாக வந்து தாலாட்டுவேன்.
புயலாக மாறி
சீறிப்பாய்வேன்.
மலர் வாசனையை மக்களுக்கு எடுத்து வருவேன்.
துன்நாற்றத்தை அவ்வப்போது உணர்த்துவேன்.
மேகத்தை உலுக்கி,குலுக்கி
மழை பொழிய செய்வேன்.
நான் இல்லை என்றால்
இந்த பூமி முழுவதும் மயானம் தான் .

நிலம்
----------

நான் ஆணா,பெண்ணா?
பெண் தான், காரணம் என் பெயர் பூமாதேவி.
நான் அபூர்வமாணவள்
ஆம் பெண்களை போல
நானும் அனைத்தையும் ஈர்பவள்.
புவி ஈர்ப்பு!
நான் மிக பெரிய கூரையில்லா வீடு.
ஆண்டவன் படைத்த அனைத்த ஜீவராசிகளும் என் மேல் தான் வாழும்.
மலை, மரம், என் மேல் நிற்கும்.
கடல், ஆறு, என் மேல் ஓடும்.
கடவுள் போல் என்னுள் அனைத்து பொக்கிஷமும் அடக்கம்.
விவசாயி வணங்கும் தெய்வம் நான் தான்.
நான் தான் மானுடத்தின் வாழ்க்கையின் ஆதாரம்.
மூச்சு நின்றால் மனிதர்களை அடக்கம் செய்வது என்னை தோண்டி தான்.

ஆகாயம்
----------------
வானம் என் பெயர்
நீலம் என் நிறம்
எனக்கு இரண்டு பிள்ளைகள்
ரவி என்பது மூத்த பிள்ளையின் பெயர்
சந்திரன் என்பது மற்றோறு பிள்ளையின் பெயர்.
சூரியனின் அதீத உழைப்பால்
சம்பாதித்த வெள்ளி காசுகள்
நட்சத்திர கூட்டம்.
மேக பஞ்சை நூலாக திரித்து ஆடை வடிவமைக்கும் நிலவு.
சந்தரனை ஏனோ கவிஞர்கள் மங்கையாகவே போற்றுகிறார்கள்.
நான் நேசிக்கும் பூமிக்கு மழையை அவ்வப்போது காதல் கடிதமாக அனுப்புவேன்.
மானுடம் அனுப்பும் செயற்கோல்களை என் தோள்கள் சுமக்கின்றன.

நெருப்பு
---------------

இரு மனங்கங்கள் இனையும் இடம் திருமணம்.
அக்னி சாட்சியாக நான்.
அடுபங்கறைக்கும் எனக்கும் நீண்ட கால உறவு.
ஆலயங்களில் கற்பூமாக,
ஆண்டவனின் வீதி உலாவுக்கு தீ பந்தமாக,
நெய்வேலியில் மின்சாரமாக,
சிகரெட் முனையில் நெருப்பு கந்தாக.
நான் கனலாக, அனலாக, அடங்கிய புகையாக பயனிக்கிறேன்.

நீர்
-----

வானத்தில் இருந்து பூமிக்கு
காதல் கடிதம் எடுத்து வந்தேன் மழையாக.
நில பரப்பில் என் ஆதிக்கம் மிக அதிகம்
கடலாக, நதியாக, ஏறியாக, ஓடையாக குளமாக.
உப்பு இல்லாத பண்டம் குப்பையிலே
உப்பு என்னுள் அடக்கம்.
ஜீவராசிகளின் தாகம் தீர்பவன் நான்.
நான் இல்லாமல் இந்த உலகம் இல்லை
நான் இல்லையேன்றால் உயிரினங்கள் இல்லை.
தாயின் பனி குடத்தில் இருப்பதும் நான் தான்.
மானுடம் இறந்த பிறகு அவனை சுற்றும் வாரிசு தோளில் சுமந்து உடைக்கும் பானையில் இருப்பதும் நான் தான்.

- பாலு.

எழுதியவர் : பாலு (12-Aug-19, 9:15 pm)
சேர்த்தது : balu
பார்வை : 232

மேலே