வெள்ளப்பெருக்கு

வெள்ளப்பெருக்கு !
ஆடும் அலைகளின்
ஆக்ரோச கூச்சல்
எட்டிய எவையும்
இழுத்து செல்லும் கோபம்
வெள்ளை நுரையின்
சத்தமிட்ட சிரிப்பு
வந்து பார் ! சவாலுக்கு
அழைக்கும் நீரோட்டம்
ஆறரிவு அட்டகாசம் அடங்கி
பயத்தை மனதில்
முகத்தில் காட்டியபடி
கரையோரம் நின்று
பார்க்கும் மனிதன்
அவனது உடமைகள்
ஒவ்வொன்றாய்
அதனுள் செல்ல !

கோபத்தை காட்டிவிட்டாய்
இயற்கையே
உன் சாந்தத்தை
காணவிரும்புகிறோம்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (12-Aug-19, 1:40 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 119

மேலே