மழை

பறவைகள் கூட்டிணை விரையும் நேரமிது..
பலர் ராஜாவின் பாட்டினை தேடும் நேரமிது..

எண்ணையில் குளித்த பண்டத்தை தேடும் சிலர்..
உண்ணை அடைக்க பண்டம் தேடும் சிலர்..

தேநீர் தேடும் சிலர்..
தேகம் நடுங்கும் சிலர்..

கீர்த்தி பாடும் சிலர்..
திட்டி தீர்க்கும் சிலர்..

இத்தனை சிலரைக் காண
இடி மின்னல் வரவேற்புடன் வரும் மழை ராணியே வருக... வருக...

எழுதியவர் : கணேஷ் . வெ (13-Aug-19, 11:58 pm)
சேர்த்தது : Ganesh VRGR
Tanglish : mazhai
பார்வை : 330

மேலே