இயற்கை

அடர்ந்த அவ்வனத்தில் ஓர் சிற்றோடை
மான் கூட்டம் துள்ளி ஓடிட மான் குட்டி
சற்றே கால் இடற ஓடையில் விழுந்தது
மான் கூட்டம் பின்னே ஓர் பெண் புலி
தன குட்டியுடன் வீறு நடைப் போட்டு
வந்தது , ஓடையில் விழுந்த மான் குட்டியைப்
பார்த்தது …… அது அக்கணமே பாய்ந்தோடி
கணப்பொழுதில் குட்டி மாணிக் கவ்விக்கொண்டது
ஏனோ தெரியவில்லை கொடிய புலிக்கு
மனதில் வாத்சலியம்…. மான் குட்டியை
மண்ணில் கிடத்தி முகத்தால் வருடி
பாலூட்டியது தாய் மானாய் மாறி…..
பசிதீர்ந்து மான் குட்டி புலி குட்டியுடன்
விளையாட …… தூரத்தில் paratha நான்
காண்பது நிஜமா என்று அசர்ந்திட
இது நிஜமே…...
இங்கு மிருகம் கூட மனித நேயம் கொண்டு
நம்மை ஆச்சரிய படுத்தலாம் ……
ஆனால் மண்ணில் கொடுமை… சில மாந்தர்
மிருகமாய் மாறி சிறுமியரை பாலியல்
கொடுமைக்கு ஆளாக்கின்றார் …..

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (14-Aug-19, 5:17 pm)
Tanglish : iyarkai
பார்வை : 674

மேலே