நீலம் உன் தோழி

வானமே எல்லை விரிந்து கிடக்கும் நீலம்
நீ சென்று தொட்டிட
வளர் நிலவோ அழகின் எல்லை
நீ தொட்டு முத்தமிட
நீலக் கடலோ ஆழம் நீந்தும் அலைகளோ
உன்னுடன் விளையாடும் தோழி
உயர் வானமோ அலை கடலோ
நீலம் உன் தோழி அல்லது தோழன் !

எழுதியவர் : கவின் சாரலன் (14-Aug-19, 11:22 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 96

மேலே