கா முத்துக்குமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கா முத்துக்குமார்
இடம்
பிறந்த தேதி :  01-Jan-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Oct-2018
பார்த்தவர்கள்:  88
புள்ளி:  17

என் படைப்புகள்
கா முத்துக்குமார் செய்திகள்
கா முத்துக்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-May-2019 2:12 am

வெண்ணிற பறவை ஒன்று
விடியலை கனவில் விரும்பி
தவழ்ந்து கனிந்து மிதந்து
உக்கிர சிறகுகள் விரித்து
மேலெழுந்து மிருதுவாகி
உன்னத கவிதை போல
உயரங்கள் தொட்டு உரசி
ஊஞ்சலாடி உறவாடி
இடைவெளி நிரவுகிறது
இன்பம் தூவும் இசை

மேலும்

கா முத்துக்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Oct-2018 1:52 am

ஐபோன் என்ற செவலையும்
சாம்சங் என்ற வெள்ளையும்
எம்மிடம் இருந்தன ஆதியிலே
முன்னிரவில் அமுதூட்டம்
நள்ளிரவில் கண்ணோட்டம்
அதிகாலையில் முகம்நோக்கி
உச்சி முகர்ந்து இடம் மாற்றி
கைபிடித்து அழைத்து சென்று
நல்ல மேய்ப்பனாய் நாள்முழுதும்
பார்த்துபரவசம் அடைந்து
முடிவல்லா முக்தி பெற்றோம்
ப்ளுகிராஸ் கண்டுக்கொள்ளவில்லை
சாணமுமில்லை, சகதியிமில்லை
நவீன நல்ல மேய்ப்பர்கள் நாங்கள்.

மேலும்

கா முத்துக்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Oct-2018 1:25 am

படம் எடுத்தாலும்
பாம்பு அல்ல
ரசிகன் ஆனாலும்
மன்றம் இல்லை
நட்புடன்
நான்கு கால்கள்
தொழில்நுட்ப எந்திரன்
என் எதிரே நான்
அன்னையின் மடியில்
அனைத்தும் ஓர் நிரை.

மேலும்

கா முத்துக்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Oct-2018 1:19 am

நடன அசைவுகள்
எரிதழல் வெம்மை
ஏகாந்த வேள்வி
மலர்ந்து விரியும் உணவு
பசித்த மானுடம்

மேலும்

கா முத்துக்குமார் - கா முத்துக்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Oct-2018 12:36 am

கறந்தபாலின் தூய்மை போகும்
நாள்கடந்து செல்கையிலே
மருண்டுவிட்ட சிறுத்தை கூட
மான்கண்டு ஓடிவிடும்
திரண்டஅருள் வழங்காதெய்வம்
பாழாகும் காலவெளியில்
கடைதிறந்தேன் மலர்பெண்ணே
கண்ணசைவுக் கருணை வேண்டி.

மேலும்

கா முத்துக்குமார் - கா முத்துக்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Oct-2018 12:27 am

வெற்றிடங்கள் நிரம்பிய
வாழ்க்கை குடுவையை
காற்றும் நீருமாய்
நீயும் நானும்
நிரப்பிச்செல்வோம்
உரசல்கள் சமரச முயற்சி
ஊடல் அன்பின் இடைவேளை
கட்டுண்ட காதலால்
இசையற்ற வேணிற்காலத்தில்
முன்னிரவின் முற்பொழுதில்
கள்ளமற்ற கவிதை உன்னை
கனாக்கண்டேன் தோழி.

மேலும்

கா முத்துக்குமார் - கா முத்துக்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Oct-2018 12:23 am

உச்சியிலே அரைவட்ட நிலா
உலகம் ஒரு தேவதை இன்று!
இருண்மையில் பொருண்மை இணைந்த நிலா
இருப்பின் சுகிப்பை பகிரும் நிலா
அலகிலா அழகை கொட்டும் நிலா
நீட்டலும் சுருக்கமும்
இயல்பென காட்டும் நிலா
நிரந்தரமிண்மையை உரைக்கும் நிலா.

மேலும்

கா முத்துக்குமார் - கா முத்துக்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Oct-2018 12:18 am

முடிவிலியின் எல்லையிலே
முதன்முதலாய் நானும் நீயும்
தேடிஅழைந்து ஒளிபிடித்தோம்
திரவிய நதி கடந்தோம்
அகம்நிறைய அன்புடையாள்
ஆதியின் சொல் அவளாவாள்.

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே