தூவும் இன்பம்

வெண்ணிற பறவை ஒன்று
விடியலை கனவில் விரும்பி
தவழ்ந்து கனிந்து மிதந்து
உக்கிர சிறகுகள் விரித்து
மேலெழுந்து மிருதுவாகி
உன்னத கவிதை போல
உயரங்கள் தொட்டு உரசி
ஊஞ்சலாடி உறவாடி
இடைவெளி நிரவுகிறது
இன்பம் தூவும் இசை

எழுதியவர் : கா முத்துக்குமார் (15-May-19, 2:12 am)
Tanglish : thoovum inbam
பார்வை : 140

மேலே