MuthuMeena M - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  MuthuMeena M
இடம்:  NAMAKKAL
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  09-Feb-2021
பார்த்தவர்கள்:  34
புள்ளி:  4

என் படைப்புகள்
MuthuMeena M செய்திகள்
MuthuMeena M - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Feb-2021 11:21 am

அது ஒரு விவசாய குடும்பம். அச்சிறுமி அன்றாடம் தங்கள் தோட்டத்தில் உள்ள வேலைகளைச் செய்துகொண்டு வளர்கிறாள். காசு பணம் நிறைய இல்லை என்றாலும் வேறு எவ்விதமான கஷ்டங்களையும் படாமல் விவசாய வேலைகளைைச் செய்துகொண்டு 17 வருடங்கள் கழிகின்றன.அக்காலத்தில் பி.யூ.சி. முடித்த ஒருவரைத் திருமணம் செய்து வைக்கிறார்கள். பள்ளிக்கூட வாசமே என்னவென்று தெரியாதவள் அவள். 65 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணின் எண்ணங்கள் எவ்வாறு இருந்தனவோ தெரியவில்லை. ஒன்று மட்டும் நிச்சயமாகச் சொல்ல முடியும். தன் வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்ல வேண்டும் என்ற எண்ணம் எக்காலமானாலும் இருக்கும். பார்த்தால், கணவர் எந்நேரமும் குட

மேலும்

MuthuMeena M - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Feb-2021 11:17 am

கற்பனையில் காதல் பேசிய என்னிடம்,
கவிதையாய் உயிரில் வந்து கலந்தாய்.
கனவில் யூகித்து மகிழ்ந்து என்னிடம்,
உறவாய்த் தோன்றி கைகள் கோர்த்தாய்.
கேள்விகள் பலவாறு எழுந்த என்னிடம்,
பதிலாய் உன் புன்முறுவல் அளித்தாய்.
வெற்றிடம் மீதமிருந்த என்னிடம்,
உறவாய்ச் சேர்ந்து புத்துயிர் தந்தாய்.

மேலும்

MuthuMeena M - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Feb-2021 11:09 am

கனவில் காதல் மொழிகள் பேசுகிறாயே,
எப்போது உன்கைகளில் என்னை ஏந்திக் கொள்வாய்?
நினைவில் உதித்து என்னை ஆட்கொள்கிறாயே,
எப்போது நனவில் தோன்றி அணைப்பாய்?
மாலைத் தென்றலாய் இப்பெண்ணுடல் தீண்டுகிறாயே,
எப்போது முழுமையாக என்னைக் கேட்பாய்?
வான்மழையாய்ப் பொழிந்து என் பெண்மையை நனைக்கிறாயே,
எப்போது வந்து வெப்பம் தருவாய்?
தலையணையாய் என் கன்னத்தில் முத்தம் இடுகிறாயே,
எப்போது என் செவ்விதழ் ருசிப்பாய்?
ரோஜா மலராய் கூந்தலில் மணக்கிறாயே,
எப்போது என் வாசனையை நுகர்வாய்?
வார்த்தையாய் தோன்றி என்னில் கவிதையாகிறாயே,
எப்போது என் வாழ்க்கைப் புத்தகமாவாய்?

மேலும்

MuthuMeena M - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Feb-2021 10:51 am

ராமாயணத்தின் ராமனாக,
மகாபாரதத்தின் அர்ஜுனனாக, திருவிளையாடலின் ஈசனாக,
கோகுலத்தின் கண்ணனாக, சிலப்பதிகாரத்தின் கோவலனாக,
புறநானூற்றின் பாட்டுடைத்தலைவனாக, யாவரையும் யூகிக்கிறேன்,
மணவாளனாகும் உன் ஒற்றை உருவில்!

மேலும்

இந்த இப்பிறவிக்கு இருமாதரை சிந்தையாலும் தொடேன் என்ற உறுதி பூண்டு வாழ்ந்த ராம காவியத்தின் தலைவன் ராமனாக மட்டும் மணவாளனைக் காண்பது சாலச் சிறந்தது மற்றவர்கள் ஒன்றிற்குமேல் மனைவி அல்லது காதலி உடையவர்கள். 09-Feb-2021 6:36 pm
தலைப்பைப் பார்த்து மனவாள மாமுனி என்று எண்ணி படித்தால் மணமுடிக்கும் ஒருவருக்கான கவிதை அழகு. 09-Feb-2021 11:06 am
மேலும்...
கருத்துகள்

மேலே