எப்போது என் வாழ்க்கைப் புத்தகமாவாய்

கனவில் காதல் மொழிகள் பேசுகிறாயே,
எப்போது உன்கைகளில் என்னை ஏந்திக் கொள்வாய்?
நினைவில் உதித்து என்னை ஆட்கொள்கிறாயே,
எப்போது நனவில் தோன்றி அணைப்பாய்?
மாலைத் தென்றலாய் இப்பெண்ணுடல் தீண்டுகிறாயே,
எப்போது முழுமையாக என்னைக் கேட்பாய்?
வான்மழையாய்ப் பொழிந்து என் பெண்மையை நனைக்கிறாயே,
எப்போது வந்து வெப்பம் தருவாய்?
தலையணையாய் என் கன்னத்தில் முத்தம் இடுகிறாயே,
எப்போது என் செவ்விதழ் ருசிப்பாய்?
ரோஜா மலராய் கூந்தலில் மணக்கிறாயே,
எப்போது என் வாசனையை நுகர்வாய்?
வார்த்தையாய் தோன்றி என்னில் கவிதையாகிறாயே,
எப்போது என் வாழ்க்கைப் புத்தகமாவாய்?

எழுதியவர் : முத்துமீனா முருகேசன் (9-Feb-21, 11:09 am)
சேர்த்தது : MuthuMeena M
பார்வை : 113

மேலே