நிலவன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : நிலவன் |
இடம் | : திருச்சி |
பிறந்த தேதி | : 19-Aug-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Nov-2022 |
பார்த்தவர்கள் | : 332 |
புள்ளி | : 87 |
இயற்பெயர் பாஸ்கர்.
மனதின் எண்ணங்களுக்குள் நீச்சல் அடிப்பவன்.
வாழ்வின் நிமிடங்களை
வரிகளுக்குள் திணிக்கிறேன்.
தவழும் குழந்தையாய்
கவிதை தீவில் விழுந்து எழுகிறேன்.
மெல்ல எழுந்து,
மெதுவாய் நடந்து,
மென்மையாய் ஓடி,
மேன்மை தமிழ் தாயை
கட்டி அணைக்கிறேன்.
குழறும் வார்த்தை வரிகளை
புன்னகையோடு ரசிக்கிறாள்.
உன் சிரிப்புக்காக மேலும் மேலும்
கிறுக்கல் மொழியில் கதை பேசுகிறேன்.
தமிழ் தாயே பிள்ளை மொழி
பொறுத்து அருள்வாய்.
விழியை சுருக்கும்
இமையின் வழி
கோபம் கண்டு
பணியாமல் நானா?
திட்டும் போதும்
தலை தூக்கா
நிலை கொண்டு
நிற்காமல் நானா?
கண்ணீர் கோர்த்து
தோளில் சாயும்
உன் காதலை
ஏந்தாமல் நானா?
சளைக்காமல் சமையல்
ருசி கூட்டும்
வெண்ணிற கைகளில்
முத்தமிடாமல் நானா?
அமர வைத்து
ஆவி பறக்க
தோசை ஊற்றி
ஊட்டாமல் நானா?
தாய்மை ஏற்று
கைவிரல் பிடித்து
ஈருயிர் சுமக்க
இணையாமல் நானா?
உன்னை போல் கண்டதில்லை தோழி
உன் தீண்டல் தேடி
தினம் குதிக்கிறேன்.
ஏன் பிறந்தோம்?
எதற்கு வாழ்கிறோம்?
என்ன செய்தோம்?
என்ன செய்வோம்?
என தெரியாமல்
சுற்றும் உலகோடு
சுற்றி திரிந்தேன்.
என்னுடைய உலகம்
உன்னில் கண்டேன்.
சுமக்கும் நினைவுகள்
உனதானது.
கவலைகள் சூழும் நேரம்
உனை நினைக்கிறேன்.
அவை அனைத்தும் மறைந்து
மனம் முழுதும் நீயாகிறாய்.
மறைந்து காணும் சொர்க்கம்
இருந்து காண்கிறேன்.
இழுத்தால் தான் ஏறும் பட்டம்
விட்டு விட்டால் பறந்து போகும்.
விழிக்கும் நேரம்
மீண்டும் வரும் நினைவு போல்
தேடினால் ஓடி வரும்
நட்பே நீ வேண்டும்.
வானத்தில் பறக்க அல்ல
நிலத்தில் நிமிர்ந்து நிற்க
நீ வேண்டும்.
மூடனே
நொடி தாண்டா மின்னலும்
ஒளி காட்டி செல்லும்.
நாடி கொண்ட மனிதா
வாழ்ந்து விடு.
ஊருக்காக அல்ல உனக்காக.
உன்னை கண்டு உலகம்
சிரிப்பதும் இல்லை
அழுவதும் இல்லை
இருக்கும் வரை பாரம் சுமக்கும்
மறைந்தபின் மண்ணில் ஏற்க்கும்.
கவிதை வரைய
காகிதம் கிடைத்ததே
அதில் நிறைக்க
வண்ணம் போல வரிகள்
இல்லையே
மனகுப்பி நிறைய
வார்த்தை கொண்டு
அதை கோர்க்கும்
வித்தை அறிய தவிக்கிறேன்.
கண்ணதாசன் உன்னை படித்து
எண்ணம் வரைய விழைகிறேன்.