தோழி

உன்னை போல் கண்டதில்லை தோழி
உன் தீண்டல் தேடி
தினம் குதிக்கிறேன்.
ஏன் பிறந்தோம்?
எதற்கு வாழ்கிறோம்?
என்ன செய்தோம்?
என்ன செய்வோம்?
என தெரியாமல்
சுற்றும் உலகோடு
சுற்றி திரிந்தேன்.
என்னுடைய உலகம்
உன்னில் கண்டேன்.
சுமக்கும் நினைவுகள்
உனதானது.
கவலைகள் சூழும் நேரம்
உனை நினைக்கிறேன்.
அவை அனைத்தும் மறைந்து
மனம் முழுதும் நீயாகிறாய்.
மறைந்து காணும் சொர்க்கம்
இருந்து காண்கிறேன்.

எழுதியவர் : நிலவன் (28-Dec-22, 2:55 pm)
சேர்த்தது : நிலவன்
Tanglish : thozhi
பார்வை : 63

மேலே