என் உள்ளத்தில் ஊஞ்சல் ஆடும் பேரழகே 555
***என் உள்ளத்தில் ஊஞ்சல் ஆடும் பேரழகே 555 ***
உயிரானவளே...
தினம் கனவில் காணும் உன்னை
எப்படி கட்டி போடுவது என்னருகில்...
கடலில் அலைகள்
ஓயாமல் இருப்பது போல...
என் மனகடலில் நீ என்றும்
அலைவீசி கொண்டு இருப்பாய்...
கடலில்
மிதக்கும் படகைபோல...
என் கைகளில்
நீ மிதந்து செல்ல...
நான்
தாங்கி கொள்ள வேண்டும்...
மேகமறைவில்
வந்து வந்து செல்லும் கதிரவன்...
நாம் கைகோர்த்து
ரசிக்க வேண்டும்...
குளிரிலும்
இதமான கதகதப்பு...
உன்னை அனைத்து கொண்டு
நான் ரசிக்க வேண்டும்...
கைகளில் ஏந்திய உன்னை
கடித்து ருசிக்க வேண்டும்...
உள்ளுக்குள் ஆசைகள்
பல இருந்தும்...
ஏதோ ஒரு தயக்கம் கொண்டு
ரசிக்க வேண்டும்...
எதிர்பாராத நேரத்தில்
நீ கொடுக்க வேண்டும் முதல் முத்தம்...
காயாத ஈரமாக
என்றும் என் கன்னத்தில்...
உன் விழிகளின் வீச்சை
நேருக்கு நேர் பார்க்க முடியாமல்...
பலமுறை பார்வையை
திருப்பி இருக்கிறேன்...
விழி அழகே உன் விழியில்
என்னை காணும் போது...
உன் பூ முகத்தை
நான் எப்படி வர்ணிப்பேன்...
என் உயிரானவளே.....
***முதல்பூ.பெ.மணி.....***