Pappu Padalgal - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Pappu Padalgal
இடம்:  கோவை
பிறந்த தேதி :  06-Jan-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Mar-2022
பார்த்தவர்கள்:  32
புள்ளி:  9

என் படைப்புகள்
Pappu Padalgal செய்திகள்
Pappu Padalgal - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Mar-2022 3:53 am

ஆராரி ராரோ
ஆரி ராராரிராரோ
செல்லமே யாரோ - என்
பப்புமா ராரோ
ஆராரி ராரோ
ஆரி ராராரிராரோ

மோகத்தை தூண்டிடும்
தேகத்தின் கோடுகள்
கொஞ்சிக் குழைந்திடும்
பிஞ்சுக் கன்னங்கள்

ஆராரிரோ ஆரி ராராரிரோ
ஆராரிரோ ஆரி ராராரிரோ

எண்ணங்கள் எத்தனை
ஓடுது சோகங்கள்
கண்ணனை பார்த்ததும்
காணாத யோகங்கள்
கண்டேனடி பூச்செந்தேடனடி
வந்தானடி கண்ணன்
வந்தானடி

(ஆராரி ராரோ)

போகுது பொழுது
நானதில் விழுது
நீ வந்து ஆடிடும்
தூளி யடா
இன்பங்கள் எண்ணியே
இமைகள் மூடிடு
இன்னமும் கொண்டாந்து
தாரே னடா
கன்னம் கொடு கண்ணே
முத்தமிடு பின்னலிடும்
நாலு எட்டுமெடு

(ஆராரி ராரோ)

பால்முகம் மாறாத

மேலும்

Pappu Padalgal - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Mar-2022 2:07 am

தித்திக்கும் செங்கரும்பே தெவிட்டாத செல்லமுதே
பூவுக்கும் வாசம் வந்தது உன்னாலோ
பூவே உன் நேசம் கொண்டது வந்தாலோ

ஆராரிராரிரோ.. ஆராரிராரிரோ
ஆராரி ஆரிராரி ஆராரோ
ஆராரி ஆரிராரி ஆராரோ

நீ நடக்கும் ஓசைக்கும் நீக்காத ஓடைக்கும்
சம்பந்தம் பேசிப்போனது சந்தனமோ
சல்லாபம் பாடச் சொன்னது பன்னீரோ

(ஆராரிராரிரோ..)

நடை போடும் வீதியிலோ நாடாளும் தேதியிலோ
நிழல் போல நானும் வருவேன் உன்னோடு
கலங்காதே கண்ணே கண்ணில் நீரோடு

(ஆராரி..)

வேரோடு மண்வாசம் மண்ணோடு உன்நேசம்
மாரோடு மலர்ந்தது தானே உன் சுவாசம்
மாறாது மகனே உந்தன் தாய்ப்பாசம்

(ஆராரிராரிரோ..)

கார்காலக் குளிருக்கும் கத்தாழை நிழலுக்கும்

மேலும்

Pappu Padalgal - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Mar-2022 3:16 am

அன்னக்கிளி சின்ன வண்ணக்கிளி
சேதி சொல்லும் என் செல்லக்கிளி
பச்சை பசுவென புல்லுவெளி
பார்த்து பழகுது பச்சைக்கிளி
தந்தையென பேரும் தந்தவன் நீயடி
தாயெனும் கோவிலில் தஞ்சமடி
ராதையவள் கைகள் தந்தோனாம் பாடிட
தூளிகைக்கு கர்ணன் வந்தானடி

லாலி லாலி லாலி லாலி லாலி லாலி
லாலி லாலியோ லாலி லாலி ..

தட்டுங்கடி தாளம் தட்டுங்கடி
ஊருக்கு கேட்கட்டும் சத்தமடி
சேர்த்து வச்ச இவன் சேட்டைகள
செல்லமாச் சொல்லி தட்டுங்கடி
குன்றாத மாமலை போலவே வாழ்ந்திட
கோவிந்த நாமத்தை சொல்லுங்கடி
குலசாமியும் கூடவே காவலுமாகிட
கோடி மலர்களை கொட்டுங்கடி

(லாலி ..)

புல்லின் நுனிதனில் பாதமடி
பொன்னு ஒளிரும்

மேலும்

Pappu Padalgal - ஜீவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Mar-2022 7:11 pm

தெய்வம் என்பது யாதெனில் அவரவர்
தாயும் தந்தையு மாம்.

தெய்வம் என்பது யாதெனில் அறிவுக்கண்
திறக்கும் நல்லாசிரிய னாம்.

தெய்வம் என்பது யாதெனில் அவரவர்
மனமெ னும்கோ விலாம்.

தேவைக்குத் தேவைப்படும் நேரம் - தேவை
தெய்வம் என்று ணர்.

உருவமில்லா ஓர்சக்தி எங்கும் நிறை
கருவே இறையென் றறி.

விஞ்ஞான அஞ்ஞான முடிச்சு க்குள்
மெய்ஞான விளக்கே இறை.

வெளியெலாம் தேடும் மனமே - தெய்வம்
உன்னுள்ளே உள்ளது காண்.

சேர்வாரை சேரும் செல்வம் - சேர்ந்தபின்
சேர்வாரை அழிக்கும் காண்.

தோல்சுருங்கி தலையெல்லாம் நரை - அவை
அனுபவக்கடல் தள்ளும் நுரை.

சொல்சுருங்க தெரிவது விஞ்ஞானம் - பின்
தோல்சுர

மேலும்

"தோல்சுருங்கி தலையெல்லாம் நரை - அவை அனுபவக்கடல் தள்ளும் நுரை." "விஞ்ஞான அஞ்ஞான முடிச்சு க்குள் மெய்ஞான விளக்கே இறை. " அருமை ஜீவன் ..வாழ்த்துக்கள் 12-Mar-2022 1:57 am
சிறப்புகள் கவிஞரே விஞ்ஞானம் மெய்ஞானம் அஞ்ஞானம்.. எல்லாம் வேற லெவல். 11-Mar-2022 8:39 pm
Pappu Padalgal - ஜீவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Mar-2022 9:26 pm

பெண்ணே....
வருகிறாயா? சந்தோஷம்.
வசந்தங்கள் மலரும்.
வரவில்லையா? மனவருத்தமில்லை
வாட்டங்களுமில்லை.
உங்களுக்கு மனசாட்சியே இல்லையா?
இருந்தது. ஆனால்
உங்களால் ஏலம் விடப்பட்டதால்
அது விற்பனையாகிப்போனது.
எங்களைப்போல் "கற்பு" உங்களுக்கில்லையா?
இருக்கின்றது.ஆனால்
நாங்கள் அதோடு இருந்துவிட்டால்
நீங்கள் வேறுபேர் இட்டு கூப்பிட்டுவிடுகிறீர்களே.
எங்களினங்களை கற்பழிக்கும்போது மிருகங்களைவிட
கீழ்தரமாகிவிடுகிறீர்களே?
ஆம். என்ன செய்வது?
பிள்ளையையும் கிள்ளிவிட்டு

மேலும்

நன்றி பப்பு நண்பரே...தொடர்பில் இருக்கவும். 12-Mar-2022 1:17 pm
வணக்கம் ஜீவன்.. உங்கள் படைப்பு நல்ல இருக்கு . நல்ல முயற்சி . உங்கள் சிந்தனையும் சிறப்பு! 12-Mar-2022 1:50 am
Pappu Padalgal - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Mar-2022 1:31 am

தங்கத் தூரி
என் பப்பு தூரி -ஆரிராரி
என் அழகு தூரி

ஆரிராரிராரிராரிராரிராரிராரோ
ஆரிராரிராரிராரிராரிராரிராரோ

காணும் கனவுகள் யாவும்
நாளை உனதடா - அதை
எண்ணி எண்ணி நாளும்
போகும் கண்ணே உறங்கடா!
ஏழுமலை ஏழுகடல்
மனம் தாவுதடா - ஏழ்மையிலும்
ஏதோ சுகம் கூடுதடா

(ஆரி..)

வானம் ஒரு எல்லை
ஆனால் உனக்கது இல்ல
தோல்வி எனும் சொல்ல
நாவும் சொன்னதில்ல
மோகச் சிறகினில் வானில்
ஏறி வெள்ளி முளைக்குதோ
அட ஓடும் மேகம்
உனக்கென்ன பயமிருக்குதோ
நடுவானில் முழு நிலா விளக்கடா
நடுக்கங்கள் உனக்கென்ன
கண்ணே உறங்கடா!

(ஆரி..)

குயில் சத்தம் கேட்க
மனமெங்கோ பறக்குதா
குட்டி போட்ட மான்களாட்டம்
கால்கள் நடக்

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே