பப்பு பாடல் 8
தித்திக்கும் செங்கரும்பே தெவிட்டாத செல்லமுதே
பூவுக்கும் வாசம் வந்தது உன்னாலோ
பூவே உன் நேசம் கொண்டது வந்தாலோ
ஆராரிராரிரோ.. ஆராரிராரிரோ
ஆராரி ஆரிராரி ஆராரோ
ஆராரி ஆரிராரி ஆராரோ
நீ நடக்கும் ஓசைக்கும் நீக்காத ஓடைக்கும்
சம்பந்தம் பேசிப்போனது சந்தனமோ
சல்லாபம் பாடச் சொன்னது பன்னீரோ
(ஆராரிராரிரோ..)
நடை போடும் வீதியிலோ நாடாளும் தேதியிலோ
நிழல் போல நானும் வருவேன் உன்னோடு
கலங்காதே கண்ணே கண்ணில் நீரோடு
(ஆராரி..)
வேரோடு மண்வாசம் மண்ணோடு உன்நேசம்
மாரோடு மலர்ந்தது தானே உன் சுவாசம்
மாறாது மகனே உந்தன் தாய்ப்பாசம்
(ஆராரிராரிரோ..)
கார்காலக் குளிருக்கும் கத்தாழை நிழலுக்கும்
உட்காந்து ஊஞ்சல் கட்டுது உன்தேகம்
தாளாது மகனே தாயின் நெஞ்சோரம்
(ஆராரி..)
குளத்தோரக் குருவிக்கும் குத்தால அருவிக்கும்
சங்கீத ஞானம் வந்தது உன்னாலோ
என் ஜீவன் மாயம் ஆனது எதனாலோ
(ஆராரிராரிரோ..)