பப்பு பாடல் 9
ஆராரி ராரோ
ஆரி ராராரிராரோ
செல்லமே யாரோ - என்
பப்புமா ராரோ
ஆராரி ராரோ
ஆரி ராராரிராரோ
மோகத்தை தூண்டிடும்
தேகத்தின் கோடுகள்
கொஞ்சிக் குழைந்திடும்
பிஞ்சுக் கன்னங்கள்
ஆராரிரோ ஆரி ராராரிரோ
ஆராரிரோ ஆரி ராராரிரோ
எண்ணங்கள் எத்தனை
ஓடுது சோகங்கள்
கண்ணனை பார்த்ததும்
காணாத யோகங்கள்
கண்டேனடி பூச்செந்தேடனடி
வந்தானடி கண்ணன்
வந்தானடி
(ஆராரி ராரோ)
போகுது பொழுது
நானதில் விழுது
நீ வந்து ஆடிடும்
தூளி யடா
இன்பங்கள் எண்ணியே
இமைகள் மூடிடு
இன்னமும் கொண்டாந்து
தாரே னடா
கன்னம் கொடு கண்ணே
முத்தமிடு பின்னலிடும்
நாலு எட்டுமெடு
(ஆராரி ராரோ)
பால்முகம் மாறாத
பாலகன் உனக்கு
பாசத்தில் பஞ்சனை
கட்டி வைப்பேன்
பன்னீரின் பார்வைக்கு
பரிசு தந்திட
பூலோகம் எங்கிலும்
எட்டு வைப்பேன்
போகும் வழி
எங்கும் முத்தமடி
முத்தத்திலே ஏதுகுத்தமடி
(ஆராரிரோ..)
சிந்திடும் கண்ணீரும்
சிவக்கும் செவ்விதழ்
சேர்ந்திட வந்தாய்
என் செல்வமடா
மண்ணின்மேல் ஆயிரம்
போரிடும் வேலையில்
நெஞ்சினில் தாய்முகம்
வெல்வாயடா
நெஞ்சம் பொறு
கொஞ்சம் பொறு
வஞ்சமென்றால் நெஞ்சே
கொஞ்சம் பொறு
(ஆராரிரோ)
கூட்டினில் தேஞ்சிட்டு
பாட்டினை பாடுது
பூமொட்டு தேன்
சிந்த கண்டேனடா
நீ தொட்டு பேசிட
தேகங்கள் சிலிர்த்து
புன்னகை புஸ்பங்கள்
சிந்துதடா
தீண்டும் சுகம்
நெஞ்சம் வேண்டுதடி
நெஞ்ச மெல்லாம்
வஞ்சம் போனதடி
(ஆராரிரோ)
வீரமும் வெற்றியும்
விலகிச் செல்லாது
உழைக்கும் உன்
கையில் உள்ளதடா
வேகமும் வேர்வையும்
வீணாகிப் போகாது
வெளிச்சம் உன்
கண்ணில் உள்ளதடா
நிழல் உந்தன்
பாதம் தொடும்
நித்திரையில் அது
தேகம் தொடும்
(ஆராரிரோ)