வள்ளுவனாய் naan

தெய்வம் என்பது யாதெனில் அவரவர்
தாயும் தந்தையு மாம்.

தெய்வம் என்பது யாதெனில் அறிவுக்கண்
திறக்கும் நல்லாசிரிய னாம்.

தெய்வம் என்பது யாதெனில் அவரவர்
மனமெ னும்கோ விலாம்.

தேவைக்குத் தேவைப்படும் நேரம் - தேவை
தெய்வம் என்று ணர்.

உருவமில்லா ஓர்சக்தி எங்கும் நிறை
கருவே இறையென் றறி.

விஞ்ஞான அஞ்ஞான முடிச்சு க்குள்
மெய்ஞான விளக்கே இறை.

வெளியெலாம் தேடும் மனமே - தெய்வம்
உன்னுள்ளே உள்ளது காண்.

சேர்வாரை சேரும் செல்வம் - சேர்ந்தபின்
சேர்வாரை அழிக்கும் காண்.

தோல்சுருங்கி தலையெல்லாம் நரை - அவை
அனுபவக்கடல் தள்ளும் நுரை.

சொல்சுருங்க தெரிவது விஞ்ஞானம் - பின்
தோல்சுருங்க தெளிவது மெய்ஞானம்.

கல்லடி பட்டுபழுப்பது கனி - வாழ்வில்
சொல்லடி பட்டுபழுப்பது முனி.

விருட்சமாய் ஒளிரும் சாதனைகள் - மனதின்
இருட்டிலே வேராய் வேதனைகள்.

எழுதியவர் : (11-Mar-22, 7:11 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 52

மேலே