பப்பு பாடல்-7

அன்னக்கிளி சின்ன வண்ணக்கிளி
சேதி சொல்லும் என் செல்லக்கிளி
பச்சை பசுவென புல்லுவெளி
பார்த்து பழகுது பச்சைக்கிளி
தந்தையென பேரும் தந்தவன் நீயடி
தாயெனும் கோவிலில் தஞ்சமடி
ராதையவள் கைகள் தந்தோனாம் பாடிட
தூளிகைக்கு கர்ணன் வந்தானடி

லாலி லாலி லாலி லாலி லாலி லாலி
லாலி லாலியோ லாலி லாலி ..

தட்டுங்கடி தாளம் தட்டுங்கடி
ஊருக்கு கேட்கட்டும் சத்தமடி
சேர்த்து வச்ச இவன் சேட்டைகள
செல்லமாச் சொல்லி தட்டுங்கடி
குன்றாத மாமலை போலவே வாழ்ந்திட
கோவிந்த நாமத்தை சொல்லுங்கடி
குலசாமியும் கூடவே காவலுமாகிட
கோடி மலர்களை கொட்டுங்கடி

(லாலி ..)

புல்லின் நுனிதனில் பாதமடி
பொன்னு ஒளிரும் மேனியடி
கண்டு கழித்திட வாருங்கடி
காதல் வசத்தினில் பாடுங்கடி
தண்ணீரில் ஆடிடும் தாழம் பூவே
இவன் கைகள் ஏந்திட ஏங்குதடி
ததும்பி தம்பி தரையில் நடக்க
தொலையும் மனச தேடுங்கடி

(லாலி ..)

செல்லச் சிரிப்பினை சேர்த்து வச்சேன்
சேல துணிக்குள்ள பூட்டி வச்சேன்
சாயங்காலம் சன்னல் சாத்தி வச்சேன்
சிங்கார வேலன சிங்காரிச்சேன்
செவ்விதழ் ரெண்டும் செந்தமிழ் பாடிட
சிந்தையிலே வெள்ளம் பொங்குதடி
சிணுங்கி சிணுங்கி சீரும் குணத்தில்
சின்னப்புள்ள தனம் உள்ளதடி

(லாலி ..)

எழுந்து ஓட விட்டு புடி
கண்ணன் கெறங்கிடாம பாத்துக்கடி
கொலுசு ஓச புதுசடி - இவன்
போடும் ஆட்டம் திணுசடி
சட்டுனு வீசும் சாரமழையில்
சட்ட நெனையாம பாத்துக்கடி
தோஸ்து கூட்டம் தோத்து போனாலும்
தோழ தட்டி தேத்துங்கடி

(லாலி ..)

கண்கள் உண்ணும் வேலை
தேடும் அன்னையடி காது
உறங்க கேட்கும் தந்தையடி
கைககள் ரெண்டும் போடும் தாளமடி
கால்கள் ரெண்டும் ஆட தோனுதடி
தொல்லைகள் மீறி தொட்டிலை ஆட்ட
தோகமயிலும் தூங்குதடி
அசந்துறங்கும் அழகை காண
நெஞ்சில் ஆழி அலைகள் ஆடுதடி

எழுதியவர் : பப்பு பாடல்கள் (12-Mar-22, 3:16 am)
சேர்த்தது : Pappu Padalgal
பார்வை : 48

மேலே